ஏழைகளுக்காக உழைக்கும் அரசு; ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரை

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கியது. பார்லி., கூட்டு குழு கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசுகையில், எனது அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும், ஏழைமக்கள் நலனுக்காக மத்திய அரசு உழைத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.


ஜனாதிபதி உரை விவரம் வருமாறு :
பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு முனைந்து செயல்பட்டு வருகிறது. ஏழைகள் வாழ்வை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லவும், அனைத்து தரப்பினரும் மேன்மையடையவும் எனது அரசு பாடுபடுகிறது. எதிர்காலம் நல்ல பல முன்னேற்றங்களை எதிர்நோக்கி உள்ளது. அரசின் திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிளீன் இந்தியா திட்டம் பாராட்டுதலுக்குரியது. எம்.பி.,க்கள் தங்களின் 50 சதவீத நிதியை தொகுதி தூய்மை படுத்தும் திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். வரும் 2019 ல் கிளீன் இந்தியா திட்டம் முழு அளவில் வெற்றி பெறும்.


பிரதமரின் மண் வள பாதுகாப்பு திட்டம் பாராட்டுதலுக்குரியது. நாட்டில் அனைவருக்கும் வங்கி கணக்கு துவக்கும் திட்டம் 100 சதவீதம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நீர்ப்பாசனம் மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. விவசாயிகளுக்கு பாதுகாப்பான அரசாக மத்திய அரசு செயல்படுகிறது. ஆன்லைன் மூலம் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் அதிகாரத்திற்கு வர அரசு முழு மனதுடன் செயல்படுகிறது. கறுப்பு பணம் மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு ஜனாதிபதி பேசினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...