'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் தயாரிக்கும் பணி தீவிரம்: ஆறு மாதங்களுக்குள் வழங்க அரசு நடவடிக்கை

தமிழகத்தில், 'ஸ்மார்ட் கார்டு' வடிவத்தில் இன்னும் ஆறு மாதங்களில் புது ரேஷன் கார்டுகளை வழங்கும் பணி தீவிரமடைந்து உள்ளது. ஆதார் அடையாள அட்டையில் இடம் பெற்றுள்ள விவரங்கள்அடிப்படையில், இந்த ஸ்மார்ட் கார்டுகள் தயாராகின்றன.


'ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக, அடுத்த சில மாதங்களில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்' என, சட்டசபையில் உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நேற்று உறுதிஅளித்தார்.

இது தொடர்பாக, சட்டசபையில் நடந்த விவாதம்:
பார்த்திபன் - தே.மு.தி.க.,: புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு, ரேஷன் கார்டு வழங்கப்படுவதில்லை.

அமைச்சர் காமராஜ்: தவறான தகவல்; ரேஷன் கார்டு கோரி விண்ணப்பித்த, 60 நாட்களில், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு, கார்டு வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு தொடர்பான குறைகளைத் தீர்க்க, ஒவ்வொரு தாலுகாவிலும், இரண்டாவது சனிக்கிழமை, குறை தீர்வு முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில், மதியம், 1:00 மணிக்குள் வரும் மனுக்களுக்கு, மாலை, 6:00 மணிக்குள், தீர்வு காணப்படுகிறது.

பார்த்திபன்: கலெக்டர் அலுவலகத்தில், 8,500 மனுக்கள் கொடுத்தேன். இதுவரை ஒரு கார்டு கூட வரவில்லை.

அமைச்சர் காமராஜ்: விண்ணப்பத்துடன், பெயர் நீக்க சான்று உட்பட, தேவையான ஆவணங்களை வழங்க
வேண்டும். அவை இல்லாத மனுக்கள், தள்ளுபடி செய்யப்படும்.
பொன்னுப்பாண்டி - இ.கம்யூ.,: 10 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய, ரேஷன் கார்டுகளையே மக்கள் பயன்படுத்துகின்றனர். இவை நைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், அரசு மீண்டும் உள்தாள்ஒட்டுகிறது.
அமைச்சர் காமராஜ்: தற்போது புழக்கத்தில் உள்ள, ரேஷன் கார்டுகள், 2005ல் ஜெயலலிதா ஆட்சியின்போது வழங்கப்பட்டவை. அதன் பின், புதிய கார்டு, 2009ல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதைய தி.மு.க., அரசு வழங்கவில்லை.

உத்தரவு:மீண்டும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், ரேஷன் கார்டுக்கு பதில், ஸ்மார்ட் கார்டு (மின்னணு அட்டை) வழங்க, நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.இதன் மூலம், போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க முடியும். 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, 903 கோடி ரூபாய் தேவைப்பட்டது.
அதை வழங்கும்படி, மத்திய அரசிடம் கேட்டோம். ஆனால், மத்திய அரசு வழங்கவில்லை. எனினும், மாநில நிதியில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 76.5 சதவீதம் முடிந்துள்ளது. இதனால், இப்பணி தாமதமானது. ஓரிரு மாதங்களில், அனைவருக்கும் 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும். இவ்வாறு, விவாதம் நடந்தது.

'ஸ்கேன்' வசதிஇருக்கும்:தமிழகத்தில், மத்திய அரசின், 'ஆதார்' விவரங்கள் அடிப்படையில், விழி, விரல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய, கையடக்க வடிவில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. இந்த கார்டில், கம்ப்யூட்டர் மூலம், விவரங்களை 'ஸ்கேன்' செய்யும் வசதி இருக்கும். இதற்காக, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும், பிரத்யேக சாதனம் வழங்கப்பட உள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள், அதை, பிரத்யேக சாதனத்தில் பொருத்துவர். அதில், பொருட்கள் வாங்கிய மற்றும் வாங்காத விவரங்கள் பதிவாகும். கடை திறக்கப்படும் நேரம் மற்றும் மூடும் நேரமும் பதிவாகும்.இவை, சென்னை, உணவு வழங்கல் அலுவலகத்தில் உள்ள, 'மெயின் சர்வர்' மூலம் கண்காணிக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...