பெண் குழந்தைகளுக்கு அஞ்சலகம் மூலம் சிறப்பு சேமிப்பு திட்டம்: மத்திய அரசு அறிமுகம்

மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கான அஞ்சலகம் மூலம் சிறப்பு சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


இது குறித்து கடலூர் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் பஞ்சாபகேசன் செய்திக்குறிப்பு: மத்திய அரசால் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், அவர்களுக்கு கல்வி அறிவைக் கொடுப்பதற்கும் பெண் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம் (சுகன்யா சம்ருத்தி கணக்கு) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் உதவியுடன் சுகன்யா சம்ருத்தி கணக்கை மத்திய மண்டலம் கீழ் உள்ள அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களிலும் துவங்க முடியும்.கணக்கு துவங்க 1,000 ரூபாய் குறைந்த பட்ச தொகையாகும். அதை தொடர்ந்து 100 ரூபாய் அல்லது 200, 300 என பணம் செலுத்தலாம்.

ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சமாக 1.50 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். கணக்கு துவங்கிய நாள் முதல் 14 ஆண்டுகள் பணம் செலுத்த வேண்டும். இந்த நிதியாண்டிற்கான (2014-2015) வட்டி வீதம் 9.1 சதவீதமாகும். இது வேறு எந்த சேமிப்பு கணக்கு திட்டத்திற்கும் இல்லாத சிறப்பாகும். இந்த முறையில் நாள், மாதம் ஆண்டில் என எத்øனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம்.மேலும், ஒரு வசதியாக, கணக்கு வைத்திருக்கும் பெண் குழந்தை 18 வயது முடிந்த பின், கடந்த நிதி ஆண்டு இறுதியில் உள்ள இருப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக 50 சதவீதம் வரை திருமணத்துக்காக அல்லது படிப்புக்காக பணம் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வாரிசு நியமன வசதி இல்லை. கணக்கு துவங்கி 21 ஆண்டுகளுக்கு பின்னர் கணக்கு முதிர்வடையும்.மேலும் விவரங்களுக்கு இச் சேவையை பயன்படுத்திக் கொள்ள அருகில் உள்ள அஞ்சலகங்களை அணுகி பயன்பெறலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...