எந்த ஒரு நாட்டிற்கும் ‘உற்பத்தி’ மிக மிக முக்கியம். அந்தவகையில், இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி தான் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் என்பதில் சந்தேகமே இல்லை. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட வளர்ந்த நாடுகள் அனைத்தும் இதற்கு சான்று.
இன்ஜினியரிங் என்பது ஒரு புரொபஷனல் படிப்பு. இன்று, இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு, தேவையான தகுதிகளை அந்த 4 ஆண்டு காலத்தில் வளர்த்துக்கொள்கிறார்களா? இல்லையா? என்பதை பொறுத்தே அமைந்துள்ளது. வேலை கிடைக்காதோர், தேவையான தகுதிகளை வளர்த்துக்கொள்ளவில்லை அல்லது அதற்கு தேவையான சூழ்நிலைகள் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.
நிறுவனங்களுக்கு நேரமில்லை
இன்ஜினியரிங் படித்தவர்களை, தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்கேட்ப தயார்படுத்த 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தேவைப்படுகிறது. அந்தளவுக்கு கால அவகாசம் மற்றும் தேவையான வசதிகளை கொடுத்து, பயிற்சி அளிக்க தொழில் நிறுவனங்கள் தயாராக இல்லை. வேலைக்கு அமர்த்திய உடனே நிறுவனங்கள் ‘ரிசல்ட்’ எதிர்பார்க்க தொடங்கிவிடுகின்றன.
எனவே, உள்கட்டமைப்பு, எனர்ஜி, ஹெல்த், ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் என ஒவ்வொரு துறையிலும் வரும் புதிய தொழில்நுட்பங்கள் எவை? எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும் ஏரியாக்கள் எவை? போன்றவற்றை ஆராய்ந்து அறிந்து அதற்கேட்ப தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அவ்வாறு போதிய திறன்களை வளர்த்துக்கொள்ளும் பட்சத்தில், வேலை இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.
கல்லூரிகளின் கடமை
தொழில் நிறுவனங்களின் தேவைக்கேட்ப மாணவர்களுக்கு தேவையான திறன்களை வளர்க்கும் சூழ்நிலைகளை, குறிப்பாக இன்ஜினியரிங் கல்லூரிகள் உருவாக்க வேண்டியது அவசியம். அத்தகைய சூழலை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ‘சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி’யில் தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்கள் சார்ந்த துறையில், அவர்களுக்கு உரிய ஆர்வத்தை உருவாக்கி, தேவையான சூழலை ஏற்படுத்தி, திறன்களை வளர்ப்பதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம். ரோபாட்டிக்ஸ், ஸ்கில் டெவலப்மென்ட், மெக்கானிக்கல், மெக்கட்ரானிக்ஸ், கட்டிங் டூல்ஸ் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துறை சார்ந்த நிபுணர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து, மாணவர்களுடன் நேரடியாக கலந்துரையாடும் நிகழ்ச்சி ரெகுலராக நடத்தப்படுகிறது.
துறை சார்ந்த முன்னணி தொழில் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் இணைந்து செயல்படுகிறோம். நிறைய ‘புராஜக்ட்’களில் ஈடுபட்டுள்ளோம். அதில் மாணவர்கள் பங்கேற்பதால் உரிய பயிற்சியை பெறுகின்றனர். இதனால், தேசிய அளவில் பல்வேறு பரிசுகளை பெற முடிகிறது. போதிய வேலை வாய்ப்பும் ஏற்படுத்திக்கொடுக்க முடிகிறது.