மாணவர்கள் ஆங்கில அறிவை சோதிக்கும் 'ஆப்டிஸ்' தேர்வு

பள்ளி மாணவர்களுக்கான "ஆப்டிஸ்' ஆங்கிலத் திறன் தேர்வை பிரிட்டிஷ் கவுன்சில்அறிமுகப்படுத்தியுள்ளது.இதுகுறித்து பிரிட்டிஷ் கவுன்சிலின் தென் இந்தியத் தேர்வுத் துறைத் தலைவர் டி.விஜயலட்சுமி நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
13 முதல் 17 வயது வரையுள்ள
மாணவர்களின் ஆங்கில மொழி பேச்சு, எழுதுதல், படித்தல், கவனித்தல் ஆகிய திறன்களை மதிப்பீடு செய்யும் வகையில் "ஆப்டிஸ்' தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2 1/2 மணி நேரம் நடைபெறும் இந்தத் தேர்வினை இணையதளம் வழியாக மட்டுமே எழுத முடியும். ஆனால், இது தகுதித் தேர்வு கிடையாது.மாணவர்கள் படித்தல், எழுதுதல், பேசுதல் போன்ற எந்தத் திறனில் பின்தங்கியுள்ளனர் என்பதை கண்டறிய முடியும்.இந்தத் தேர்வினை பள்ளிகள் மூலமாக மட்டுமே எழுத முடியும். இதற்குக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...