புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 எம்.எல்.ஏ.,க்களைக் கொண்ட டில்லி சட்டசபையில் 17 பேர் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள், 29 பேர் பட்டபடிப்பு முடித்தவர்கள் ஆவர். 70 பேரில் 5 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே பள்ளி படிப்பு மட்டும் முடித்தவர்கள்.
பட்டதாரி எம்.எல்.ஏ.,க்கள் :
தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யப்பட்ட பிரமான பத்திரத்தின் அடிப்படையில், 5 பேர் மட்டும் தங்களின் கல்வித் தகுதியை பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட 29 பேர் பட்டதாரிகள் ஆவர். ஆம்ஆத்மியின் கோபால் ராய், மணிஷ் சிசோடியா, சோம்நாத் பார்தி, பா.ஜ.,வின் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட 17 பேர் பட்டமேற்படிப்பு முடித்தவர்கள்.
கெஜ்ரிவால் அமைச்சரவை :
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் அமைய உள்ள டில்லி அமைச்சரவையில் மனிஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின், ஆதர்ஷ் சாஸ்திரி, சவ்ரப் பரத்வாஜ், சந்தீப் குமார், கபில் மிஷ்ரா, ஜிதேந்திர டோமர், ஆசிம் அகமது உள்ளிட்டோர் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்களில் மனிஷ் சிசோடியாவிற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், நகர்புற வளர்ச்சித்துறை அவரது கட்டுப்பாட்டில் இயங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பந்தனா குமாரி துணை சபாநாயகராக நியமிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. கட்சி உறுப்பினர்களுடன் இன்று ஆலோசித்து அமைச்சரவை சகாக்களை தேர்வு செய்ய கெஜ்ரிவால் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ரகசியம் காக்கும் ஆம்ஆத்மி :
கெஜ்ரிவால் அமைச்சரவையில் யார், யார் இடம்பெற போகிறார்கள், அவர்களில் யார் யாருக்கு எந்த துறை ஒதுக்கப்பட உள்ளது என்பது குறித்த விபரங்களை ஆம்ஆத்மி கட்சி ரகசியமாக வைத்துள்ளது. உத்தேச பட்டியல் குறித்த விபரம் வெளியே கசிந்திருந்தாலும், அமைச்சரவை உறுப்பினர்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும், அதனை கட்சி தலைவரும் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தான் முடிவு செய்வார் எனவும் ஆம்ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அமைச்சரவையில் பெரும்பாலும் புதிய முகங்களே இடம்பெற உள்ளதாகவும், அவர்களில் ஒரு பெண் உறுப்பினர் இடம்பெறுவார் எனவும், ஒரு அமைச்சர் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவராக இருப்பார் எனவும் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.