எதிர்காலத்தில் இணையதளம் வாயிலாக ஓட்டளிக்கும் முறை அறிமுகப்படுத்த வாய்புள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் பிரம்மா கூறினார்.
ஆதார் அட்டை அடிப்படையில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக டில்லியில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பிரம்மா கூறியது, தேர்தல் கமிஷனின் அடுத்த
கட்ட நடவடிக்கையாக எதிர்காலத்தில் இணையதள மூலம் ஓட்டளிக்கும் முறைக்கு வாய்ப்பு உளளது. அதற்கான திட்டம் தேர்தல் கமிஷனிடம் உள்ளது. எனினும் இதனை நடைமுறைப்படுத்த போதிய நிதி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், பயிற்சிகள் தேவை.இதற்கு கால நிர்ணயம் செய்ய முடியாது. அவ்வாறு நடைமுறைக்கு வந்தால் ஓட்டளிக்கும் முறை எளிதாகவும் காலநேரம் குறையும், பணமும் மி்ச்சமாகும் . நடந்து முடிந்த டில்லி சட்டசபை தேர்தலில் நான் வாக்களிக்க வரிசையி்ல் நின்றிருந்தேன் .
அப்போது இளைஞர்கள் சிலர் ஓட்டளிக்க மணிகணக்கில் வரிசையில் நிற்க முடியாமல் தவித்ததை காணமுடிந்தது. இணையதளம் மூலம் ஓட்டளிக்க அனுமதித்தால் சீக்கிரம் முடியும் என கூறினர். எனவே இணையதளம் மூலம் ஓட்டளிக்கும் திட்டம் எளிமையாகும் என்பதில் சந்தேகம் இல்லை. மொத்தத்தில் முறைகேடு இல்லாத ஓட்டுப்பதிவுக்குவழிவகுக்கும் என்றார்