கவலை வேண்டாம்!!!! பணிவரன் முறை ,காலமுறை ஊதியம் அனைவருக்கும் பெற்று தரும் SSTA!!!

இன்று வெளியான அரசாணை எண் ;4 நாள் .21.01.2015ல் 2003-06 வரை நியமிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 40,000 பேர் வரை உள்ளனர் ஆனால் வெறும் 28 ஆசிரியர்களுக்கு மட்டும் பணிவரன் முறை செய்ததை எதிர்த்து வரும் வாரம் நிதித்துறை செயலாளர் ,ஊதியம் ,செலவீனம் மற்றும் கல்வி துறை
செயலாளர் ,தொடக்க கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை SSTA சார்பாக வைக்கப்படும்,கோரிக்கை நிராகரிக்கப்பட்டால் உடனடியாக SSTA சார்பில் குறைந்த பொருள்  செலவில் மாவட்ட மாறுதலில் உச்ச நீதிமன்றத்தில் பெற்ற அனுபவத்தை கொண்டு உயர் நீதிமன்றத்தை நாடி விடுபட்டவர்களை கொண்டு வழக்கு தொடுத்து விரைந்து முடித்து அதற்கான அரசாணையும் பெற்று நமது உரிமையை நிலைநாட்டும் !!!                                                                     இது போன்ற பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் சங்கம் SSTA மட்டுமே ,மாநில பொறுப்பாளர்களும் இந்த பாதிப்பில் உள்ளவர்கள் தான் SSTA மாநில பொறுப்பாளர்களுக்கு நீங்கள் வாங்கும் குறைக்கப்பட்ட ஊதியமும் ,மறுக்கப்பட்ட ஓய்வூதியம்  தான்.  உங்கள் வலி(ழி)யை நன்கு உணர்ந்த ஓரே இயக்கம் SSTA மட்டுமே.      இணைவீர் SSTA வில் ,              உண்மையை சொல்வோம் !!சொல்வதை செய்வோம் !!!       செய்வதை சொல்வோம் !!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...