10ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவுள்ள 52 ஆயிரத்து 998 பேர்!

விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வை 52 ஆயிரத்து 998 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 5ம் தேதி துவங்கிய பிளஸ் 2 தேர்வு, வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. வரும் 19ம் தேதி துவங்கும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு
துவங்கி, ஏப்., 10ம் தேதி முடிகிறது. இந்த முறை 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் நாட்கள் இடைவெளி விட்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது.

52, 998 பேர்

திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 240 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 195 ஆண்கள், 10 ஆயிரத்து 414 பெண்கள் சேர்த்து மொத்தம் 20 ஆயிரத்து 609 பேரும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 163 பள்ளி களைச் சேர்ந்த 7,599 மாணவர்கள், 7,577 மாணவிகள் உட்பட 15 ஆயிரத்து 176 பேரும், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 133 பள்ளிகளைச் சேர்ந்த, 8, 485 மாணவர்கள், 7, 832 மாணவிகள் உட்பட 16 ஆயிரத்து 317 பேர் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 52 ஆயிரத்து 102 பேர் மற்றும் தனித்தேர்வர்கள் 896 பேர் உட்பட 52 ஆயிரத்து 998 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வு மையம்

இத்தேர்விற்காக திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 72 மையங்கள், விழுப் புரம் கல்வி மாவட்டத்தில் 49 மையங்கள், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 43 மையங்கள் உட்பட 164 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வினாத்தாள்கள்

இத்தேர்விற்கான வினாத்தாள்கள் மற்றும் விடைத் தாள்கள் திண்டிவனத்தில் இரண்டு மையங்கள், செஞ்சியில் இரண்டு மையங்கள், திருக்கோவிலூரில் ஒரு மையம், விழுப்புரத்தில் மூன்று மையங்கள், உளுந்தூர்பேட்டையில் இரண்டு இடங்களிலும், கள்ளக்குறிச்சியில் இரண்டு இடங்களிலும், சின்னசேலத்தில் ஓரிடத்திலும் மற்றும் சங்கராபுரத்தில் ஒரு மையம் உட்பட 14 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை

சி.இ.ஓ., மார்ஸ் தலைமையில், திண்டிவனம் டி. இ.ஓ., பாஸ்கரன், விழுப்புரம் டி.இ.ஓ., ராஜ மாணிக்கம், கள்ளக்குறிச்சி டி.இ.ஓ., தனமணி மேற்பார்வையில் தனிப்படை அமைத்துள்ளனர். கலெக்டர் சம்பத் தலைமையில் டி.ஆர்.ஓ., ஆர்.டி.ஓ.,க்கள் தலைமையில் தனிக்குழுக்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டு, ஆய்வு செய்ய உள்ளனர்.

அனைத்து தேர்வு மையங்களிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் அச்சமின்றியும், பாதுகாப்புடனும் தேர்வு எழுதுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சி.இ.ஓ., மார்ஸ் மற்றும் டி.இ.ஓ.,க்கள் செய்து வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...