பெண்குழந்தைகளுக்கானமத்திய அரசின் 'சுகன்யா சம்ருதி' திட்டத்திற்கு வரவேற்பு: 1.80 லட்சம் கணக்குகள் துவங்கி சாதனை

பெண் குழந்தைகளின் நலனுக்காக, மத்திய அரசின் சார்பில், ஜனவரியில் துவங்கப்பட்ட, 'சுகன்யா சம்ருதி' திட்டத்தின் கீழ், இரு மாதங்களில், 1.80 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணத் தேவைகளுக்காக, ஜனவரி 22ல் பிரதமர் நரேந்திர மோடி புதிய திட்டத்தை துவங்கி வைத்தார். 'சுகன்யா சம்ருதி' எனப் பெயரிடப்பட்ட இத்திட்டத்தின் கீழ், வங்கிகள் அல்லது தபால் நிலையங்களில் வைப்புக் கணக்கு துவங்கி, அதில் பணத்தை சேமிக்க முடியும்.
அதிகபட்சமாக...:திட்டம் துவங்கிய இரு மாதங்களில், நாடு முழுவதும், 1.80 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, கர்நாடகாவில், 56,471 கணக்குகளும், தமிழகத்தில், 43,362 கணக்குகளும், 'சுகன்யா சம்ருதி' திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ளன. குறைந்தபட்சமாக, பீகாரில், 204, கேரளாவில், 222 மற்றும் மேற்கு வங்கத்தில், 334 கணக்குகளும் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் பயன் என்ன?பிறந்த குழந்தை முதல், 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் இந்த வைப்புக் கணக்கு துவங்க முடியும். 1,000 ரூபாய் முதல், 1.5 லட்சம் ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் வைப்புத் தொகையாக வைக்க முடியும். இந்த தொகைக்கு, 9.1 சதவீத வட்டி கிடைப்பதுடன், வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது. வைப்புத் தொகை வைத்த ஆண்டிலிருந்து, 21 ஆண்டுகள் கழித்தோ அல்லது, 18 வயது பூர்த்தி அடைந்த பெண்ணின் திருமணம் நடக்கும் போதோ இந்த தொகையை திரும்பப் பெற முடியும்.தவிர, பெண் குழந்தையின் மேல் படிப்பிற்காக, இந்த வைப்புத் தொகையில் பாதியை முன் கூட்டியே பெற முடியும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...