1,800 காலிப் பணியிடங்களை நிரப்ப கிராம சுகாதார செவிலியர்கள் வலியுறுத்தல்

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1800 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சங்கத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினம், 5-ஆவது மாநில மாநாடு, ஓய்வுபெற்ற சங்க நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா கும்பகோணம் மகாமக கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கிராம சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க ரூ. 19.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து இலவச மடிக்கணினி வழங்கியதற்கும், கலந்தாய்வு மூலம் மாறுதல் வழங்க ஆணை பிறப்பித்தமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

மகளிர் நலத் திட்டங்கள், குழந்தை பராமரிப்பு திட்டங்களை உரிய மேலாண்மை செய்ய தற்போதுள்ள சமுதாய நலச் செவிலியர் பணியிடங்களை இரட்டிப்பாக்க வேண்டும். 1800-க்கும் அதிகமாக காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர்களின் பணி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள்தொகை உயர்வுக்கேற்ப துணை சுகாதார மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை.

இதை உயர்த்துவதன் மூலம் பிரசவ இறப்பு விகிதம், குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்படும் என்பதால், தற்போதுள்ள 10,484 துணை மையங்களை 12,000 ஆக உயர்த்த பொது சுகாதாரத் துறை இயக்குநரை கேட்டுக் கொள்வது.

மத்திய அரசு உதவியுடன் தமிழக அரசால் செயல்படுத்தப்படவுள்ள திட்டத்தில் 770 நடமாடும் சுகாதார மையம் தொடங்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தில் கிராமப்புறத்தில் பணியாற்றக்கூடிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்படாமல் உள்ளது. எனவே, அதில் 770 பதவிகளை உருவாக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விழாவில், சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர். இந்திரா, கும்பகோணம் நகர கூட்டுறவு வங்கித் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராம. ராமநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...