தமிழகத்துக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ.182 கோடி நிதி ஒதுக்கீடு

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்காக, தமிழகத்துக்கு இந்த ஆண்டு கூடுதலாக ரூ.182 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த நிதியாண்டில் (2014-15) ரூ.403 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.585 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த
நிதியாண்டுகளில் அனுமதி வழங்கி நிலுவையில் உள்ள கட்டடப் பணிகளுக்காக ரூ.1,089 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் தமிழகத்தில் 1,096 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. கல்வியில் பின்தங்கிய வட்டாரங்களில் 44 மாணவியர் விடுதிகள், 44 மாதிரிப் பள்ளிகள் எனப் பல்வேறு பணிகள் இந்தத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்துக்கான மத்திய திட்ட அனுமதி வழங்கும் குழுவின் கூட்டம் தில்லியில் அண்மையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் விவரம்:

தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் அனுமதியளிக்கப்பட்ட 13,320 ஆசிரியர் பணியிடங்களில் 11,900 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடான ரூ.585 கோடியில் ஆசிரியர்களுக்கான ஊதியமாக மட்டும் ரூ.499 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9,10 ஆம் வகுப்பு மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு ஆசிரியர்களுக்கு ரூ.6 கோடியும், மாணவியர் விடுதிகளுக்கு ரூ.9 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.



கிராமப்புற மாணவர்களுக்கு ஆலோசனை: கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேல்படிப்பு தொடர்பான புத்தகங்கள், ஆலோசனைகள் வழங்க ரூ.2 கோடியை தமிழக அரசு கோரியிருந்தது.

ஆனால், இந்தத் திட்டத்துக்கு ரூ.80 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மாணவர்களின் மேல்படிப்புக்கு பாடத்திட்டங்களை உருவாக்குவதோடு, வேலைவாய்ப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேற்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் பங்கேற்க அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மிகவும் மந்தம்: தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுகின்றன.

தரம் உயர்த்தப்பட்ட 1,096 பள்ளிகளில் 125 பள்ளிகளில் மட்டுமே கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 75 பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த தமிழக அதிகாரிகள், வரும் ஜூன் மாதத்துக்குள் மேலும் 344 பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் எனத் தெரிவித்தனர். மேலும், இதுவரை அனுமதியளிக்கப்பட்டுள்ள பணிகளில் 60 சதவீதப் பணிகள் நிகழ் நிதியாண்டில் முடிக்கப்படும் எனவும் மத்திய அரசிடம் உறுதியளித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...