கல்வித் துறையில் 22 பேர் பணி நியமனம்

குருப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 22 பேர் கடலூர் மாவட்ட கல்வித்துறையில் நியமிக்கப்பட்டனர்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் (அசிஸ்டெண்ட்) பணியிடத்தை
நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குருப்-2 தேர்வு நடத்தப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களில் 364 பேர் கல்வி துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். அதில், 22 பேர் கடலூர் மாவட்ட கல்வி துறைக்கு ஒதுக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 22 பேருக்கு பணியிடம் ஒதுக்குவதற்காக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நேற்று, காலை 10:00 மணிக்கு கடலூரில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடந்தது.சி.இ.ஓ., பாலமுரளி முன்னிலையில் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 14 பேருக்கு கடலூர் மாவட்டத்திலும், 8 பேருக்கு பிற மாவட்டங்களில் உள்ள காலி பணியிடங்களில் நியமித்து, பணி ஆணை வழங்கப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...