குரூப் - 2' தேர்வு முடிவு வெளியீடு!

குரூப் - 2' தேர்வு முடிவை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., நேற்றிரவு, வெளியிட்டது. டி.என்.பி.எஸ்.சி., சார்பில், கடந்த நவ., 8, 9 ஆகிய தேதிகளில், 'குரூப் - 2' பதவிக்கான, 'மெயின்' தேர்வுநடந்தது.

துணை வணிக வரி அதிகாரி, உதவி பிரிவு அதிகாரி, தொழிலாளர் ஆய்வாளர், நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட, 1,130 பதவிகளுக்கு, மொத்தம், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில், 5,635 பேர் தேர்வு பெற்றுள்ளனர். அவர்களின், தேர்வு எண்கள், டி.என்.பி.எஸ்.சி.,யின் 'www.tnpsc.gov.in' என்ற இணையதளத்தில்வெளியிடப்பட்டு உள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். வரும், 26ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக, ஒவ்வொரு தேர்வருக்கும், தேதி மற்றும்நேரம் குறித்து, தனித்தனியாக, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் இருந்து, கடிதம் மூலம் தெரிவிக்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...