பிளஸ் 2 கணிதத் தேர்வு: அதிக மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற வாய்ப்பு

பிளஸ் 2 கணிதத் தேர்வு வினாத்தாள் எளிமையாக இருந்ததால் இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 200-க்கு 200 பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


ஆனால், இதுவரை நடைபெற்ற தேர்வுகளிலேயே மிக அதிகளவாக கணிதப் பாடத்தில் காப்பியடித்ததாக 52 பேர் புதன்கிழமை பிடிபட்டனர். விலங்கியல் பாடத்தில் காப்பியடித்ததாக ஒருவர் பிடிபட்டார்.

பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட தொழில் படிப்புகளில் சேருவதற்கான முக்கியப் பாடங்களுக்கான தேர்வுகள் கணிதப் பாடத்துடன் புதன்கிழமை தொடங்கின.

கணிதப் பாட வினாத்தாள் எளிமையாக இருந்தது. குறிப்பாக, 10 மதிப்பெண், ஒரு மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் வினாக்களில் 30 கேள்விகள் அறிமுகமான கேள்விகளில் இருந்தே கேட்கப்பட்டுள்ளன. ஆனால், 10 கேள்விகள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டன. புத்தகம் முழுவதும் நன்றாகப் படித்த மாணவர்களே இவற்றுக்கு விடையளிக்க முடியும் என கணித ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:

இந்தத் தேர்வை எழுதிய பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையிலேயே வினாத்தாள் இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் கட்டாயமாக விடையளிக்க வேண்டிய பகுதிகளிலும், ஒரு மதிப்பெண் பகுதியிலும் வினாக்கள் கடினமானவையாக இருந்தன. ஆனால், இந்த ஆண்டு பல பகுதிகள் எளிமையாக இருந்தன. சராசரி மாணவர் கூட 200-க்கு 150 மதிப்பெண் பெறலாம். தேர்வுக்கு நன்கு தயாரான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற முடியும். அதேநேரத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் சிரமமானவையாக இருக்கும் என்பதால், முழு மதிப்பெண் பெறுவதில் சிரமம் இருக்கும்.

10 மதிப்பெண் கேள்வி: 10 மதிப்பெண் பகுதியில் 58-ஆவது கேள்வியில் பிளஸ் குறியீட்டுடன் கேள்வி உள்ளது. ஆனால், புத்தகத்தில் இந்தக் கேள்வி மைனஸ் குறியீட்டுடன் இடம்பெற்றுள்ளது. ப்ளூ பிரின்ட் அடிப்படையில் 6 மதிப்பெண், 10 மதிப்பெண் கேள்விகளில் தலா ஒரு கேள்வியை பாடப்புத்தகத்துக்கு வெளியில் இருந்து கேட்கலாம். அதனடிப்படையில், இந்த கேள்வி மாணவர்களைச் சிந்திக்க வைக்கும் வகையில் மாற்றி கேட்கப்பட்டிருக்கலாம். ஆனால், பெரும்பாலான மாணவர்கள் இந்தக் கேள்வியில் உள்ள வித்தியாசத்தைக் கவனிக்காமல் தங்களுக்கு தெரிந்த விடையையே எழுதிவைக்க வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

53 மாணவர்கள் சிக்கினர்: கணிதப் பாடத்தில் 52 பேரும், விலங்கியல் பாடத்தில் ஒருவரும் காப்பியடித்ததாகப் பிடிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் 14 பேரும், வேலூர், மதுரை மாவட்டங்களில் தலா 9 பேரும் கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் தலா 4 பேரும், நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருவரும் பிடிபட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...