மார்ச் 31க்குள் மானிய திட்டத்தில் சேர, 'கெடு'; 'இண்டேன்' நிறுவனம் திட்டவட்ட அறிவிப்பு!

நேரடி மானிய திட்டத்தில், வரும், 31ம் தேதி வரை இணையாதவர்களுக்கு, ஏப்., 1ம் தேதி முதல் மானியம் இல்லாத காஸ் சிலிண்டர்கள் தான், வினியோகம் செய்யப்படும்' என, 'இண்டேன்' திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், இந்துஸ்தான்
பெட்ரோலியம் மற்றும் பாரத் காஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சமையல் காஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்துவருகின்றன. இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களிலும், கோடிக்கணக்கான சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ளன.சிலிண்டருக்கு வழங்கப்படும் மானியத்தை, பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள் மூலம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்திற்காக, சமையல் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் வங்கி கணக்கு, ஆதார் அடையாள அட்டை தொடர்பான தகவல்களை சேகரித்து வருகின்றன.

இத்திட்டத்தில் இணைய கடந்தாண்டு, டிசம்பர் மாதமே கடைசியாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பயனாளிகளின் நலன் கருதி, வரும், ௩௧ம் தேதி வரை இணைய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில், சேராதவர்களுக்கு ஏப்ரல் முதல் மானியம் இல்லாமல், சந்தை விலையிலேயே சிலிண்டர்கள் வினியோகிக்கப்படும் என, இண்டேன் அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், முதுநிலை மேலாளர் யோகராணி கூறியதாவது: நேரடி மானிய திட்டத்தில், இண்டேனில், 8௫ சதவீதம் வாடிக்கையாளர்கள் கோவை பகுதிகளில் இணைந்துள்ளனர். இத்திட்டத்தில் சேராதவர்களுக்கு, வரும், 31ம் தேதிக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டர்களே விற்பனை செய்யப்படும்.ஏப்., முதல் ஜூன் மாதம் வரை சேருபவர்களுக்கு, மூன்று மாதங்களுக்கான மானிய தொகை சேர்த்து ஒரே தவணையாக வழங்கப்படும். ஜூலை மாதத்தில் சேருபவர்களுக்கு, அதற்கு முந்தைய மாதங்களுக்கான மானியம் பெற முடியாது.இவ்வாறு, யோகராணி கூறினார்.

எஸ்.எம்.எஸ்., வசதி அறிமுகம் : 'இண்டேன்' வாடிக்கையாளர்கள் இதுவரை, இணையதளம் மற்றும் முகவரின் மூலம் மட்டுமே விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து வந்தனர். தற்போது, எஸ்.எம்.எஸ்., மூலம் அறியும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர் பெறுவதற்காக பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து, எரிவாயு இணைப்பு அடையாள எண்ணை (17 இலக்க குறியீட்டு எண்) அறிய INDANE LPGID என்ற குறியீட்டையும், நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளோமா என்பதற்கு INDANE DBTLSTATUS, மானிய விலையில் காஸ் சிலிண்டர் எண்ணிக்கைக்கு INDANE LPGQUOTA, நேரடி மானியத் திட்ட முன்வைப்பு மற்றும் மானியத்தொகை விபரங்களுக்கு INDANE SUBSIDY ஆகிய குறியீடுகளை, 'டைப்' செய்து 77382 99899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், விபரங்கள் உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...