கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 36 மணி நேரம் நடனம்

குன்னூரில், அரசு கல்லூரி மாணவர்கள், லிம்கா சாதனைக்காக தொடர்ந்து 36 மணி நேரம் நடனம் ஆடினர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு கலை கல்லூரியில், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் இம்மானுவேல், வினீத், கிருஷ்ணா, முகேஷ், ஆஷா, விஜி, சுமித்ரா.
குன்னூரில் உள்ள ஒரு டான்ஸ் அகாடமியில் நடனம் பயின்று வருகின்றனர். பயிற்சியாளர் ரித்தீஷ், உதவி பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் தலைமையில், லிம்கா சாதனைக்காக, தொடர்ந்து, 36 மணி நேரம் நடனமாடும் முயற்சியை துவக்கினர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில், சினிமா பாடல்கள், மேற்கத்திய நடனத்தை, இவர்கள் அரங்கேற்றினர். நேற்று முன்தினம், காலை, 8:00 மணிக்கு துவங்கிய, இந்த போட்டி, நேற்று முன்தினம் மாலை வரை நடந்தது. இந்த நிகழ்ச்சிகள் முழுவதும் விதிமுறைகளின கீழ், பதிவு செய்யப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...