ஆசிரியர் தகுதி தேர்வில் 5% மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நிலை என்ன ஆகும் ?

அரசின் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் 5% மதிப்பெண் தளர்வு கொடுக்கப்பட்டது இதனை அடிப்படையாக வைத்து பலர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் படி  பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களாக பணியில் அமர்ந்தனர் அவர்களுக்கு மட்டும் இன்று வரை அரசின் ஊதியம் கிடைத்து வருகிறது.



பின் கடந்த 2014 செப்டம்பர் மாதம் மதுரை கிளையில் அதிரடியாக 5% மதிப்பெண் ரத்து செய்யப்பட்ட நிலையில் மேற்கண்ட தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வின் மூலம் மேற்கொண்ட பணியிடங்கள் மாவட்ட கல்வி அலுவலரால் அங்கிகரிக்கப்படவில்லை மேலும் பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர் தேவை என அறிவிப்புகளும் 90க்கு மேல் பெற்றவர்களையே பணியில் அமர்த்தி வருகின்றனர்....ஒரு சில பள்ளி தாளளர்கள் மாவட்ட கல்வி அலுவலர்களால் அங்கீகரிக்கப்படாத பணியிடங்களில் 5% மதிப்பெண் தளர்வில் உள்ளவர்களை வெளியேற்றி 90 மதிப்பெண் பெற்றவர்களையே பணியில் அமர்த்தி வருகின்றனர்....

இறுதியாக மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்புக்கு முன் பணிய்சேர்ந்தவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது, தீர்ப்புக்கு பின் 5% மதிப்பெண் தளர்வில் பணிநியமனம் நடைபெறவில்லை அதனை அங்கீகரிக்கவும் இல்லை.....

இந்த சிக்கலை தீர்க்கவே அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் நியமனப்பட்டியலின் 4வது வரிசையில் உள்ள மதிப்பெண் சான்றிதழ் செல்லுபடி ஆகுமா என அறிய உண்மைத்தன்மை சான்றிதழ் மாவட்டக்கல்வி அலுவலர்களால் கேட்கப்படுவதாக அறியப்படுகிறது......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...