6வது நாளாக போராட்டம் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கோடம்பாக்கத்தில் சாலை மறியல்

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே அடுத்தடுத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் சிறப்பு தேர்வு நடத்தி பார்வையற்றவர்களுக்கு உடனடியாக வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 5 நாட்களாக சென்னையின் பல்வேறு இடங்களில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 6வது நாளான நேற்று காலை 9.30 மணியளவில் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, மறியல் போராட்டத்தில் ஈடுபட 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திரண்டனர். இதையறிந்த போலீசார், 4 வாகனங்களுடன் தயார் நிலையில் நின்றனர். உடனே, மாற்றுத் திறனாளிகள் இரு குழுவாக பிரிந்தனர். முதலில் காலை 9.40 மணியளவில் ஒரு பிரிவினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆற்காடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதுடன், சிலர் சாலைகளில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர். இதனால், அவர்களை கைது செய்த போலீசார், வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அப்போது, மற்றொரு பிரிவினர் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து போராட்டத்தில் கலந்துகொள்ள தாமதமாக வந்த மாற்றுத்திறனாளிகளை போலீசார் திருப்பி அனுப்பினர். ஒரே பகுதியில் அடுத்தடுத்து மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்று த்திறனாளிகள் 7 பேர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெறாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த ராஜா கூறுகையில், ‘9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் போராட்டத்தை முடக்கத்தான் முயல்கிறது. அமைச்சர் வளர்மதி பேச்சு வார்த்தைக்கு அழைத்து போராட்டத்தை கைவிடும் படி மட்டும் கூறினார். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவிக்கவில்லை. திருச்சியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார் கடந்தாண்டை போலவே அராஜகமாக நீண்ட தூரம் கொண்டு சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் விட்டுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,’ என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...