சமூக மாற்றத்தின்
ஆணிவேர்களே
சமூக ஏற்றத்தின்
ஏணிப்படிகளே
நித்தமும் சத்தமிட்டு
ரத்தமெல்லாம் சுண்ட
கூனியும் குறுகியும்
அச்சமும் அதிகார
உச்சமும் புடைசூழ
கரும்பலகையே கதியென்று
கடமையே விதியென்று
வதங்கி
விழிபிதிங்கி
வாடிய மலராக
வாழ்ந்துவரும்
என்னருமை
ஆசிரிய நண்பர்களே ...
ஓய்வுக்குப்பின்
ஒத்தாசையாய் இருக்கும்
ஓய்வூதியத்தைக்
கொன்றுவிட்டு
பங்களிப்பு ஓய்வூதியம்
படையலிடப்பட்டுள்ளது.
பங்களிப்பு எனும்
பங்காளி கருநாகம்
கழுத்தைச்சுற்றி
இறுக்கிக்கொண்டு
இருமாப்போடு இருக்கிறது ...
மகனை தந்தையும்
தந்தையை மகனும்
தாயை மகளும்
மகளைத் தாயும்
அண்ணனை தம்பியும்
தம்பியை அண்ணனும் கொன்ற செய்தியும்
நண்பனை நண்பனே
கொன்ற செய்தியும்
ஏன்
கற்பித்த ஆசிரியரை
கத்தியால் குத்திய
மாணவன் என்ற
செய்தியும் உண்டு
ஆனால் ....
மாணவனைக் கொன்ற
ஆசிரியர்
என்ற செய்தி
எங்காவது உண்டா.
இப்படி இருக்க
எங்கோ?
எப்படியோ ?
எதற்காகவோ?
எந்த சூழ்நிலைக்கோ?
தற்கொலை எனும்
கோழைத்தனத்திற்கு
கொடிபிடிக்கும்
மாணவருக்கான
ஆசிரியர் மீது
அராசகத்தாக்குதல்
அநீதியின் அவதாரமா?
வகுப்பறை என்ன
ஆசிரியர் களின்
கல்லறையா?
பயிர் பாதுகாப்பிற்கு
பூச்சி மருந்து தரும்
அரசு...
ஆசிரியரின்
உயிர் பாதுகாப்பிற்கு
உத்தரவாதம் தருமா?
குட்டக் குட்ட குனியும்
ஆசிரிய இனமே!
வெட்ட வெட்ட வளரும்
வேங்கையாகுங்கள்.
அடிபட்டதும்
அடிமைப்பட்டதும் போதும்
பணப்பலனால்
பாதிக்கப்பட்டு
மன பாரத்தால்
பாதியானது போதும்
பொங்கி எழு
உணர்விருந்தால்
உடனே கிளம்பு
மார்ச்சு எட்டு
பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு
பாடைகட்டும நாள்
மார்ச்சு எட்டு
ஆசிரிய இனமே
ஒன்று திரளும்
அற்புத நாள்
அரசுக்கு அதிர்ச்சி தரும்
சரித்திர நாள்
எந்த வேலையானாலும்
சொந்த வேலையானாலும்
புறந்தள்ளி
புறப்படு தோழா.
திரண்டு வா
மிரண்டு போகட்டும்
அனைவரும்
ஓரணியில் திரளும்
பேரணியின் நீளத்தால்
சீனப்பெருஞ்சுவர்
குட்டையாகட்டும்
ஓங்கி ஒலிக்கும்
ஒட்டுமொத்த குரலால்
இடியே
இடிந்து உட்காரட்டும்
வா...
விழுந்து கிடக்கும் நீ
எழுந்து வா ...
வீரு கொண்டு வா
உன்
நரம்பெடுத்து
வீணை மீட்ட வா.
புதிய ஓய்வூதியத்தை
புரட்டி எடுக்கும்
புயலாக வா...
சங்கமெல்லாம்
சங்கமிக்கும்
சமுத்திர பேரணியில்
அங்கம் வகிக்க
சிங்கமென சீறி வா..
ஆசிரியரைப்
பாதுகாக்க
சட்டம் வேண்டும்
அதற்கு
உன் வருகை
அரசைத் தூண்டும்
எட்டு வை ...
மார்ச்சு எட்டை நோக்கி ...
எட்டாத உரிமைகள் கூட
எப்படியும்
வந்து சேரும் ****
ஆணிவேர்களே
சமூக ஏற்றத்தின்
ஏணிப்படிகளே
நித்தமும் சத்தமிட்டு
ரத்தமெல்லாம் சுண்ட
கூனியும் குறுகியும்
அச்சமும் அதிகார
உச்சமும் புடைசூழ
கரும்பலகையே கதியென்று
கடமையே விதியென்று
வதங்கி
விழிபிதிங்கி
வாடிய மலராக
வாழ்ந்துவரும்
என்னருமை
ஆசிரிய நண்பர்களே ...
ஓய்வுக்குப்பின்
ஒத்தாசையாய் இருக்கும்
ஓய்வூதியத்தைக்
கொன்றுவிட்டு
பங்களிப்பு ஓய்வூதியம்
படையலிடப்பட்டுள்ளது.
பங்களிப்பு எனும்
பங்காளி கருநாகம்
கழுத்தைச்சுற்றி
இறுக்கிக்கொண்டு
இருமாப்போடு இருக்கிறது ...
மகனை தந்தையும்
தந்தையை மகனும்
தாயை மகளும்
மகளைத் தாயும்
அண்ணனை தம்பியும்
தம்பியை அண்ணனும் கொன்ற செய்தியும்
நண்பனை நண்பனே
கொன்ற செய்தியும்
ஏன்
கற்பித்த ஆசிரியரை
கத்தியால் குத்திய
மாணவன் என்ற
செய்தியும் உண்டு
ஆனால் ....
மாணவனைக் கொன்ற
ஆசிரியர்
என்ற செய்தி
எங்காவது உண்டா.
இப்படி இருக்க
எங்கோ?
எப்படியோ ?
எதற்காகவோ?
எந்த சூழ்நிலைக்கோ?
தற்கொலை எனும்
கோழைத்தனத்திற்கு
கொடிபிடிக்கும்
மாணவருக்கான
ஆசிரியர் மீது
அராசகத்தாக்குதல்
அநீதியின் அவதாரமா?
வகுப்பறை என்ன
ஆசிரியர் களின்
கல்லறையா?
பயிர் பாதுகாப்பிற்கு
பூச்சி மருந்து தரும்
அரசு...
ஆசிரியரின்
உயிர் பாதுகாப்பிற்கு
உத்தரவாதம் தருமா?
குட்டக் குட்ட குனியும்
ஆசிரிய இனமே!
வெட்ட வெட்ட வளரும்
வேங்கையாகுங்கள்.
அடிபட்டதும்
அடிமைப்பட்டதும் போதும்
பணப்பலனால்
பாதிக்கப்பட்டு
மன பாரத்தால்
பாதியானது போதும்
பொங்கி எழு
உணர்விருந்தால்
உடனே கிளம்பு
மார்ச்சு எட்டு
பங்களிப்பு ஓய்வூதியத்திற்கு
பாடைகட்டும நாள்
மார்ச்சு எட்டு
ஆசிரிய இனமே
ஒன்று திரளும்
அற்புத நாள்
அரசுக்கு அதிர்ச்சி தரும்
சரித்திர நாள்
எந்த வேலையானாலும்
சொந்த வேலையானாலும்
புறந்தள்ளி
புறப்படு தோழா.
திரண்டு வா
மிரண்டு போகட்டும்
அனைவரும்
ஓரணியில் திரளும்
பேரணியின் நீளத்தால்
சீனப்பெருஞ்சுவர்
குட்டையாகட்டும்
ஓங்கி ஒலிக்கும்
ஒட்டுமொத்த குரலால்
இடியே
இடிந்து உட்காரட்டும்
வா...
விழுந்து கிடக்கும் நீ
எழுந்து வா ...
வீரு கொண்டு வா
உன்
நரம்பெடுத்து
வீணை மீட்ட வா.
புதிய ஓய்வூதியத்தை
புரட்டி எடுக்கும்
புயலாக வா...
சங்கமெல்லாம்
சங்கமிக்கும்
சமுத்திர பேரணியில்
அங்கம் வகிக்க
சிங்கமென சீறி வா..
ஆசிரியரைப்
பாதுகாக்க
சட்டம் வேண்டும்
அதற்கு
உன் வருகை
அரசைத் தூண்டும்
எட்டு வை ...
மார்ச்சு எட்டை நோக்கி ...
எட்டாத உரிமைகள் கூட
எப்படியும்
வந்து சேரும் ****