விரிவுரையாளர் பணி - 'டி.இ.டி.,தேர்வு விதிமுறை செல்லும்'...

பல்கலைக்கழகம், கல்லூரி, கல்வி மையம் ஆகியவற்றில், ல் சேர்வதற்கான குறைந்தபட்ச தகுதியாக, நெட்/ஸ்லெட் தேர்வு, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகளுக்கு, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) விலக்கு அளித்திருந்தது. ஆனால், கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, இந்த விதி விலக்கை நீக்கியது. இதை எதிர்த்து, பிஎச்.டி., மற்றும் எம்.பில்., பட்டதாரிகள் சார்பில், மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் விசாரணைக்கு பின், நேற்று சுப்ரீம் கோர்ட்
நீதிபதிகள், டி.எஸ்.தாகூர், ரோஹிண் டன் நாரிமன் ஆகியோர் அடங்கிய பென்ச் தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் ஒரே சீரான, உயர்ந்த கல்வி தரத்தை கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு, யூ.ஜி.சி., அளித்த விதிவிலக்கை நீக்கியுள்ளது. இதில், தன்னிச்சையாகவோ, பாரபட்சமாகவோ மத்திய அரசு செயல்படவில்லை. மிகச் சிறந்த கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கமே பிரதானமாக உள்ளது. அதனால், மத்திய அரசின் விதிமுறைகளை நீக்க வேண்டிய அவசியம் இல்லை. அவை தொடர்ந்து அமலில் இருக்கும். இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...