கண்ணிருந்தும் பார்வையற்றோர் நாம்...! தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி இவர்கள்...!

கண்ணிருந்தும் பார்வையற்றோர் நாம்...!
 தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி இவர்கள்...!
 தினந்தோறும் அரசையும் காவல் துறையையும் மக்களையும் திகைக்க வைக்கின்றனர்...!
தங்கள் போராட்டக் குணத்தால் பதைபதைக்க வைக்கின்றனர்...!
தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக...
தங்களையே பணயம் வைக்கின்றனர்...!

இவர்கள் இலட்சக்கணக்கில் அல்லர்...
சில நூறு தான் என்றாலும் இலட்சியக் கணக்கில் உறுதியுடன்...!
பார்வையில் தான் குறையே தவிர...
 நெஞ்சுறுதியில் சற்றும் குறையில்லை...!
 நாங்கள் இலட்சக்கணக்கானோர்...
ஆனால்...
இலட்சியமில்லாதோர்...
கண்கள் நன்றாகத் தெரியும்...
புறக்கடை வழியாக ஓடுவதற்கான வழியைத் தேடுவதற்கு...!
சில மாதங்களுக்கு முன்...
மாற்றுத் திறனாளிகள் ...
இப்போது...
பார்வை குறையுடையோர்...
கொள்கையிலும் உறுதியிலும் இலட்சியத்திலும் குறையில்லாதோர் போராட்ட பாடம் நடத்துகின்றனர்...!
எல்லாம் நன்றாக இருந்தும்...
பிறர் உழைக்க..
போராட...
ஏமாற்றி வயிறு வளர்க்க நினைப்போர் இருக்கும் வரையில்...
வெற்றி என்பது எட்டாக்கனி தான்...
கண்ணிருந்தும் குருடர்கள் நாம்...!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...