வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக, ஏப்ரல் மற்றும் மே மாதம், சிறப்பு முகாம் நடத்தப்படும் நாட்களில், ஆதார் எண் பெறாதவர்களுக்காக, 'ஆதார் மெகா முகாம்' நடத்தப்பட உள்ளது.
வாக்காளர் பட்டியலில், தவறுகளை தவிர்க்க, வாக்காளர்களின் ஆதார் எண், மொபைல் எண், இ - மெயில் முகவரி போன்றவற்றை சேகரிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவற்றை சேகரித்த பின், வாக்காளரின் அடையாள அட்டை எண்ணுடன், ஆதார் எண் இணைக்கப்படும். தேர்தல் கமிஷன் இணையதளம்,
இ - மெயில், எஸ்.எம்.எஸ்., மூலம், தேர்தல் கமிஷன் கேட்கும் விவரங்களை வழங்கலாம். இதுதவிர,ஏப்ரலில் இரண்டு நாட்கள், மே மாதம் இரண்டு நாட்கள், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. எனினும் பெரும்பாலானோர், ஆதார் எண் வாங்காமல் உள்ளனர். அவர்களுக்காக, வாக்காளர் சிறப்பு முகாம் நடத்தும் நாளில், 'ஆதார் மெகா முகாம்' நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியதாவது:'மெகாமுகாம்' நடத்தும்படி, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளருக்கு, கடிதம் எழுதினோம்; அவர்களும் ஒப்புக் கொண்டனர். எந்தப் பகுதியில், குறைவான நபர்கள் ஆதார் எண் பெற்றுள்ளனரோ, அந்த பகுதியில் முகாம் நடத்தப்படும். ஆதார் எண் விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் பதிவு எண்ணை, வாக்காளர் சிறப்பு முகாமில் வழங்கினால் போதும். அவருக்கு ஆதார் எண் வழங்கப்படும் போது, அந்த எண் நேரடியாக, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும். இவ்வாறு, சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...