பன்றி காய்ச்சலுக்கு மூன்று பேர் பலி ! கோவையில்

கோவையில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பலியானார். இத்துடன், பன்றிக்காய்ச்சலால் இறந்தவர் எண்ணிக்கை, ஒரே வாரத்தில் மூன்றாக உயர்ந்துள்ளது.



கோவை துடியலுாரை சேர்ந்த ராமசாமி மனைவி சரஸ்வதி, 60. உடல்
நலக்குறைவு காரணமாக, கடந்த வாரம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக, பிப்., 25ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரிந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இத்துடன், ஒரு வாரத்தில் மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு மூவர் பலியாகியுள்ளனர்.இந்நிலையில், அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை வழங்காததால், மூதாட்டி உயிரிழந்ததாக, அவரது உறவினர்கள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.



சரஸ்வதியின் பேரன் நிர்மல்குமார் கூறுகையில், ''தனியார் மருத்துவ மனையில், பாட்டிக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர். மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவமனையில், பாட்டிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை. 1,800 ரூபாய் வரை லஞ்சம் வழங்கினோம். அதன் பின்னரும் சிகிச்சை அளிக்காததால் அவர் உயிரிழந்தார்,'' என்றார்.



கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின்ஜோ கூறுகையில், ''மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 13 பேருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. உயிரிழந்த சரஸ்வதிக்கு, சர்க்கரை நோய் இருந்தது. மருத்துவமனைக்கு வரும் போதே, அவர் ஆபத்தான நிலையில்தான் வந்தார். ஊழியர்கள் லஞ்சம் பெற்றது குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...