இரயில்வே பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி

இரயில்வே பாதுகாப்பு படையில் (RPF) நிரப்பப்பட உள்ள 17,000 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: இரயில்வே பாதுகாப்பு படை (RPF)

காலியிடங்கள்: 17,000

பணி: கான்ஸ்டபிள்

ஆண் - 13000

பெண் - 4000

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐடிஐ, பட்டம் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 5200 - 20200 + தர ஊதியம் ரூ.  2000.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் பரிசோதனை தேர்வு மற்றும் துறை வாரியான தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

வயது வரம்பு: 01.01.2015 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அரசு விதிகளின் படி தளர்வு அளிக்கப்படும்.

தேர்வுக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.40. ST,SC,PWD மற்றும் பெண்கள் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...