சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான பாடத் திட்டம் குழப்பமாக இருப்பதாகப் புகார்

சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத் திட்டம் குழப்பமாக அமைந்திருப்பதால் அதனை மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தினர் வலியுறுத்தினர். இது குறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் தலைவர் ராஜ்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:- உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு கடந்த
ஆண்டு அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரி 5-ஆம் தேதி சிறப்பாசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. புதிய பாடத்திட்டத்தில் ஓவிய ஆசிரியர்களுக்கான பாடத்திட்டம் குழப்பமளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த புதிய பாடத்திட்டமானது ஓவிய ஆசிரியருக்கான தொழில்நுட்பத் தேர்வு அடிப்படையில் இல்லை. மாறாக 5 ஆண்டு நுண்கலை (பி.எஃப்.டி.) படிப்பு பாடத்திட்டத்துக்கு இணையாக அமைந்துள்ளதுடன், பாடத்திட்டம் முழுவதும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. போட்டித் தேர்வுக்கு புதிதாக அறிவிக்கப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பகுதிகளுக்கான நூல்கள் கிடைப்பதில் சிரமம் நீடிக்கிறது. இது போன்ற காரணங்களால் புதிய பாடத்திட்டத்தின்படி தேர்வு எழுதுவது கடினமாகியுள்ளது. எனவே, சிறப்பு ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தை மாற்றம் செய்ய வேண்டும் என முதலமைச்சர், அமைச்சர், அரசுச் செயலர் ஆகியோரைச் சந்தித்து வலியுறுத்த இருக்கிறோம் என்று அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...