தனி அறையில் தேர்வு !

சுகாதாரத்துறையினர் அறிவுரையை தொடர்ந்து, பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாணவர்களை, தனியறையில் தேர்வு எழுத வைப்பதற்கு, கல்வித்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
காரமடையை சேர்ந்த பிளஸ் 2
மாணவனுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறி வரும் மாணவரின் உடல் நிலையை, சுகாதாரத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வரும் வெள்ளியன்று கணிதத்தேர்வு நடக்க உள்ளதால், மாணவன் தனியறையில் தேர்வு எழுத அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேபோல் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான கோவையை சேர்ந்த பிளஸ்1 படிக்கும் மாணவன் உடல்நிலை கருதி, உடனடி தேர்வு நடத்தி முடிவுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான அரசு உதவி பெறும் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில், இவர்கள் மூவருக்கும் நோய் பாதிப்பு குறைவாக இருப்பதாக, சுகாதார துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் சான்றிதழ் வழங்கியுள்ளார்.அதன் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு எழுத கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சுகாதார துறை வழங்கிய அறிவுரைப்படி, மாணவர்கள் தனியறையில் தேர்வு எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



சுகாதாரத்துறை துணை இயக்குனர் சோமசுந்தரம் கூறுகையில், ''பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்குள்ளான மாணவனுக்கு நோய் முற்றிலும் குணமடைந்து விட்டது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனியறையில் தேர்வு எழுத வைக்கப்படுகிறார்.''இதேபோல் பிற மாணவர்களுக்கும் நோய் பாதிப்பு குறித்த சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.''மேலும், தேர்வறையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு மருந்துகள், முகமூடி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன,'' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...