மனசாட்சியோடு வேலை செய்யுங்கள்! கல்வித்துறை அதிகாரி 'குட்டு'

நமது நாளிதழ் செய்தி எதிரொலியாக, பிளஸ் 2 தேர்வு நடந்த மையத்தை பார்வையிட்ட கல்வித்துறை அதிகாரிகள், 'அவசர கூட்டம் நடத்தி, மையத்தின் குறைகளை தவிர்த்து, மனசாட்சியோடு வேலை செய்யுங்கள் என, அறிவுரை கூறினர்.



செங்குன்றம் அடுத்த, வடகரையில் உள்ள, அரசு ஆதி திராவிடர் நலத்துறை பள்ளியில், பிளஸ் 2 தேர்வு நடந்து வருகிறது. விதிப்படி, தேர்வு மையங்களில் வெளிச்சம், காற்றோட்டம், குடிநீர் உள்ளிட்ட வசதிகள், அவசியம் இருக்க வேண்டும். மேலும், மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் இரைச்சல், சத்தம் ஆகியவையும், தேர்வு மையத்தை ஒட்டி இருக்க கூடாது. ஆனால், வடகரை பள்ளியில், மாதவரம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில், மேற்கண்ட விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டிருந்தன. தேர்வு மையத்தின் அவல நிலை குறித்து, நேற்று, நமது நாளிதழில் செய்தி வெளியானது. அதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர், நேற்று அங்குள்ள தேர்வு மையங்களை பார்வையிட்டனர். பள்ளி நிர்வாகத்தினருடன் அவசர கூட்டம் நடந்தது. அப்போது கல்வித்துறை அதிகாரிகள், ''மனசாட்சியோடு வேலை செய்யுங்கள். மாணவ, மாணவியரை நமது பிள்ளைகளாக பாருங்கள். பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும்,'' என்றனர். மேலும், பள்ளி வளாகத்தின் உட்புறத்தில் உள்ள கட்டடத்திற்கு, தேர்வு மையத்தை மாற்றி அடிப்படை வசதிகளை உடனடியாக செய்யும்படி உத்தரவிட்டனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...