திருச்சிதிண்டுக்கல் சாலையில் கருமண்டபத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் கல்விக்கட்டணம் செலுத்தாத
மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், மாணவர்களின் இக்கருத்துக்கு கல்லூரி நிர்வாகம் சரியான பதில் அளிக்கவில்லை. இதைகண்டித்து, நேற்று காலை 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாசல் முன் தர்ணா செய்தனர். இதற்கிடையில் கடும் வெயில் அடித்ததால் கல்லூரி எதிரே மரத்தரடியில் போராட்டம் நடத்த போலீசாரிடம் மாணவர்கள் அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்ததால் மாணவர்களுக்கும், போலீசாருக் கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கல்லூரி எதிரே திண்டுக்கல் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து, மாணவர்களை தாக்கி குண்டு கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றினர். இதில், சதாம் உசேன், ஜஸ்டின் ஆகிய 2 மாணவர்கள் காயமடைந்தனர். மேலும் ஒரு மாணவர் மயக்கம் அடைந் தார். அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், சுமார் 50 மாணவர்கள் கலெக்டர் அலுவலக வாசலில் அமர்ந்து, கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்ககோரி கோஷம் எழுப்பினர்.