சுதந்திரத்திற்குப் பின், பாகிஸ்தானிலிருந்து இந்தியாவில் குடியேறியவர்களின் வங்கி டிபாசிட்டுகள், நகைகளை, பாக்., அரசு, இந்தியாவிடம் வழங்கியது. அதில், இதுவரை உரிமை கோரப்படாத பணம் மற்றும் நகைகளை, மத்திய அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இடம்பெயர்ந்தனர்: இதுகுறித்து, உள்துறை அமைச்சகம்
கூறியுள்ளதாவது: கடந்த, 1947ல் இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த போது, ஏராளமானோர், இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் இடம் பெயர்ந்தனர். அப்போது, பொதுமக்கள் வங்கிகளில், 'டிபாசிட்' செய்திருந்த பணம் மற்றும் தங்க நகைகளை அப்படியே விட்டுச் சென்றனர். இரு நாட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 1961ல் இந்திய வங்கிகளில் இருந்த டிபாசிட் தொகைகள், நகைகள் பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அதேபோல், பாக்., வங்கிகளில் இருந்த டிபாசிட் தொகை மற்றும் நகைகள், இந்திய அரசிடம் வழங்கப்பட்டன. பாக்., அரசால் ஒப்படைக்கப்பட்ட, 'சீல்' வைக்கப்பட்ட பெட்டகம், டில்லியில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
திரும்ப பெற்றனர்: மத்திய அரசின் சார்பில், பொதுமக்களுக்கு இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. தக்க சான்றுகள், அடையாளச் சான்றுகளை சமர்ப்பித்து, ஏராளமானோர் தங்கள் நகைகள் மற்றும் பணத்தை திரும்பப் பெற்று சென்றுள்ளனர். எனினும், இன்னும் ஏராளமான உரிமை கோரப்படாத பணம் மற்றும் நகை கள் உள்ளன. இதுகுறித்து பல அறிவிப்புகளை வெளியிட்டும், தக்க ஆவணங்களுடன் யாரும் உரிமை கோரமுன் வராததால், இவற்றை, மத்திய அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. போதிய கால அவகாசம் மற்றும் உரிய அறிவிப்புகளுக்குப் பின்னரே மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. இவ்வாறு, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.