ஐஎஸ் தீவிரவாதிகளால் அரியானா கல்வித்துறை வெப்சைட் முடக்கம்

அரியானாவின் கல்வித்துறை வெப்சைட்டை ஐஎஸ் தீவிரவாதிகள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலக அரங்கில் கடந்த சில மாதங்களாக பிணை கைதிகளின் தலைகளை வெட்டி ஐஎஸ் தீவிரவாதிகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் அவர்களின் ஆதிக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில்
இணையதளங்களில் புகுந்து அவ்வப்போது பல்வேறு மிரட்டல்களையும் ஐஎஸ் தீவிரவாதிகள் விடுத்து வருகின்றனர். பல நாடுகளின் வெப்சைட்டுகளையும் முடக்கியும் வருகின்றனர். இந்த சூழலில் அரியானாவின் கல்வித்துறைக்கு சொந்தமான கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கழகத்தின் வெப்சைட் ஐஎஸ் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அரியானா அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், பள்ளி கல்வி தொடர்பான பல்வேறு தகவல்களையும் நாங்கள் இதில் இருந்து பெறுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த வெப்சைட்டை திறந்தால் அதில் ஐஎஸ் தீவிரவாதிகளின் கொடி பறக்கிறது. மேலும் ஐஎஸ் அமைப்பால் இது முடக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கும் நிறைந்திருக்கிறோம் என்ற வாசகமும் காணப்பட்டது என்றார்.

ஹோலி உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக அதிகாரிகளுக்கு இது தெரியவில்லை. ஆனால் விரைவிலேயே இந்த தகவல் பரவியதும் உடனடியாக ஐஎஸ் கொடி நீக்கப்பட்டது. மேலும் தற்போது இந்த வெப்சைட் பராமரிப்பில் உள்ளது என்ற தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டு முடங்கியுள்ளது. தற்போது இது தொடர்பாக மாநில சைபர் கிரைம் உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...