ஆதார் - அசைக்க முடியாத அடையாளம்!

மானியம் பெற முக்கியம்
*  வாக்களிக்கும் அதிகாரம்
*  வங்கி கடனுக்கு அவசியம்

ஆதார்.. இந்தியா முழுக்க இப்போது கோட்டீஸ்வரர்கள் முதல் சாமான்யன் வரை உச்சரிக்கும் பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டது. ரேஷன் கடைகளில் சந்திக்கும் பொது மக்களில் பலர் அரிசி போடுகிறானா என்று கேட்பதற்கு பதில்.. ஆதார் அட்டை வாங்கிவிட்டாயா என்று கேட்கும் அளவுக்கு முன்னேறி
இருக்கிறது சமூகம். இந்தியாவே இப்போது ஆதார்.. ஆதார் என்ற அலறிக் கொண்டிருக்க என்ன காரணம். அதுவும் சட்டமே போட்டாலும் சட்டை செய்யாத மக்கள் உள்ள இந்தியாவில் ஆதார் அட்டைக்கு ஏன் இவ்வளவு மதிப்பு. மானியம் என்கிற அஸ்திரத்தை எடுத்துள்ளது மத்திய அரசு. ஆக இந்தியர்களை ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் ஒரு விஷயமாக ஆதார் மாறியுள்ளது. சலுகை வேண்டுமா? மானியம் பெற வேண்டுமா? வாக்காளர் பட்டியலில் இடம் பெற வேண்டும்? அப்போது ஆதார் அட்டை முக்கியம். இல்லையென்றால் நீ இந்தியனே இல்லை என்று சொல்லும் காலம் அடுத்த 20 ஆண்டுக்குள் எழுலாம்.
முறைகேடு தடுப்பதே இலக்கு: இந்தியாவில் ரேஷன் உணவு பொருட்கள் மற்றும் காஸ் உள்ளிட்டவைகளில் மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்குகிறது. இப்படி வழங்கப்படும் மானியத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே முறைகேட்டை தடுக்க மத்திய திட்டகமிஷன் மூலம், வறுமை கோர்ட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ஒரு அடையாள எண் கொடுக்கலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. பல்நோக்கு தேசிய அடையாள அட்டை: மக்கள் தொகை பதிவேடு திட்டத்தின் கீழ் அனைத்து மக்களுக்கும் ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டை’ வழங்கலாம் என்று முடிவு செய்தது. திட்டகமிஷன் மூலம் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு என்று தனி அடையாள எண் மற்றும் பல்நோக்கு தேசிய அடையாள அட்டை என தனித்தனியாக அடையாள எண் வழங்குவதற்கு பதில் ஒரே அடையாள எண் வழங்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி ‘யூனிக் ஐடன்டிபிகேஷன் அத்தாரிட்டி ஆப் இந்தியா (யுஐடிஏஐ) என்ற பெயரில் ‘ஆதார் எண்’ என்ற அடையாள எண் ஒவ்வொருவருக்கும் வழங்கலாம் என்று அப்போதைய மத்திய அரசு இறுதி முடிவு செய்து அறிவித்தது. அதன்படி 2009ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி இந்தியாவில் உள்ள அனைவருக்கும் ஆதார் எண் வழங்கப்படும் என்ற அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. வங்கி, தபால் நிலைய திட்டம் தோல்வி: இந்தியாவில் உள்ள தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகள் மூலம் ஆதார் எண் கொடுக்கும் பணிகள் துவங்கியது. ஆனால் இதற்கு பொதுமக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதுபற்றி மத்திய அரசு ஆதார் எண்ணின் முக்கியத்துவம், ஆதார் எண் பெற்றால் கிடைக்கும் பயன்கள் குறித்து பொதுமக்களிடம்  போதிய விளம்பரம் செய்யாததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்பட்டது. அதனால் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை.

2012ல் சூடுபிடித்தது: தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு துறையுடன் இணைந்து ஆதார் எண் வழங்குவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு துவக்கியது. இதன்படி 2012ம் ஆண்டு இந்தியா முழுவதும் ஆதார் எண் குறித்த முக்கியத்துவம் விளம்பரப்படுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் ஆதார் அட்டை வழங்கும் பணி வேகப்படுத்தப்பட்டது. ஆதார் அட்டை தயாரித்து வழங்குவதற்காக மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்திடம் பணி வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு செக்: ஆதார் கார்டு எண் அடிப்படையில்தான் தமிழக அரசு மின்னணு ரேஷன் கார்டு வழங்கும் என்றும் அறிவித்தது. இதையடுத்துதான் தமிழக மக்களுக்கு ஆதார் எண் குறித்த முக்கியத்துவம் அதிகரிக்க தொடங்கியது. ஆதார் அட்டை எடுப்பதற்காக மக்கள் முகாம்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். பல மணி நேரம் காத்து நின்றும், அலுவலகங்களுக்கு விடுமுறை எடுத்தும் ஆதார் கார்டுக்காக விண்ணப்பம் செய்தனர். காலை 9 மணியில் நடைபெறும் முகாமுக்கு அதிகாலை 2 மணி 3 மணிக்கே சென்று விடிய விடிய காத்து நின்ற சம்பவமும் நடைபெற்றது. மாலை 5 மணியுடன் முகாம் முடியப்போகிறது என்றால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாலை 4 மணிக்கே கதவை இழுத்து பூட்டிய சம்பவமும் அரங்கேறியது.
இப்படி, நாளுக்கு நாள் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக தமிழகத்தில் சுமார் 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் ஆதார் எண் பெற்று இருந்தனர். மற்றவர்களும் எடுக்க தயாராக இருந்தனர். ஒரு வாரம்தான் முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களில் எல்லாம், கூட்டம் அதிகமானதால் ஒரு மாதம், இரண்டு மாதம் வரைகூட முகாம்களின் நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

பாஜ எதிர்ப்பும், ஆதரவும்: கடந்த 2013ம் ஆண்டு, ஆதார் கார்டு திட்டத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினர் திடீர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆதார் கார்டு எடுப்பதற்காக பொதுமக்களின் விரல் ரேகை உள்ளிட்ட அனைத்து அடையாளங்களும் பதிவு செய்யப்படுகிறது. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களுக்கான பணம் ஆதார் எண் மூலம் வங்கியில் செலுத்தப்படும் என்று அறிவித்தால் முறைகேடுகள் நடைபெறும் என்று, ஆதார் எண் திட்டத்தை மத்திய அரசின் எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்த்தது. நீதிமன்றத்தில் இதுசம்பந்தமாக சிலர் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமும் அப்போதைய காங்கிரஸ் அரசுக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கியது. இதுபோன்ற நடவடிக்கைகளால் திடீரென ஆதார் அட்டை எடுப்பதற்கான முகாம்களுக்கு இருந்த வரவேற்பு குறைய தொடங்கியது. பல இடங்களில் முகாம் நடத்தப்பட்டும் போதிய கூட்டம் இல்லாத நிலை ஏற்பட்டது. அதனால், தமிழகம் முழுவதும் பொதுமக்களின் வீடு அருகே நடைபெற்று வந்த முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில் மட்டுமே ஆதார் அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இந்த நிலையில் 2014ம் ஆண்டு பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தது. பிரதமராக மோடி பதவியேற்றார். பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே காஸ் பெறுவதற்கு ஆதார் எண் கண்டிப்பாக தேவை. ஆதார் எண் மூலம் காஸ் மானியம் அப்படியே வங்கியில் செலுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்தது. இதையடுத்து, ஆதார் அட்டையின் தேவை மீண்டும் முக்கியத்துவம் பெற்றது. ஆதார் எண் பெறாதவர்கள் மீண்டும் சிறப்பு முகாம்களில் குவியத் தொடங்கினர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் அட்டையில் என்ன அடங்கி இருக்கிறது. அதை எப்படி எடுக்கலாம். அதில் திருத்தங்கள் செய்ய என்ன செய்ய வேண்டும். பொதுமக்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏற்பட்டுள்ள இடைவெளி காரணமாக ஏற்பட்டுள்ள சிக்கல் என்ன என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
ஆட்கள் பற்றாக்குறை: தமிழகம் முழுவதும் ஆதார் எண் பெறாதவர்கள் தொடர்ந்து இதுபோன்ற முகாம்களுக்கு செல்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்குள்ள ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக, சென்னை தவிர பிற மாவட்டங்களில் ஆதார் அட்டைக்கான முகாமுக்கு செல்வது என்றால் 40 முதல் 50 கி.மீ. தூரம் பயணம் செய்து செல்லும் நிலை உள்ளது. இப்படி குடும்பத்தோடு பஸ்சில் ^100க்கும் மேல் செலவு செய்து சென்றால் அன்றைய தினம் கைரேகை உள்ளிட்ட எதுவும் பதிவு செய்ய முடியவில்லை. அதிகளவு கூட்டம் இருப்பதால், மாலை வரை காத்து நின்று ஏமாற்றத்துடன் செல்ல வேண்டியதுள்ளது. சில நேரம் ஆதார் முகாம்களில் உள்ள கம்ப்யூட்டர்கள் பழுது என்று கூறி அனைவரும் திரும்பி அனுப்பும் நிலையும் உள்ளது. இதனால் விடுமுறை எடுத்து சென்ற பலர் ஏமாற்றத்துடன் செல்கின்றனர். மீண்டும் ஒருநாள் விடுமுறை எடுத்து செல்ல வேண்டுமே என்ற நிலையில், அவர்கள் தொடர்ந்து செல்லாமலே விட்டு விடுகிறார்கள்.

சென்னையை பொருத்த வரையில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாக இருக்கிறார்கள். கணவன் மற்றும் மனைவி விடுமுறை எடுத்து ஆதார் எண் பெறுவதற்காக முகாமுக்கு சென்றால், நிறைய கூட்டம் இருக்கும். ஒருநாள் முழுவதும் காத்து நின்றாலும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே ஆதார் அடையாள எண்ணுக்காக பதிவுகள் நடைபெறுவதால், பலர் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய நிலை உள்ளதால் ஆதார் அட்டை பெற முடியவில்லை என்று பொதுமக்கள் பலர் புகார் கூறுகிறார்கள். இதற்கு, போதிய அளவில் முகாம்கள் இல்லாதததே காரணம் கூறப்படுகிறது. பொதுமக்களிடம் ஆர்வம் இருந்தாலும், போதிய வசதி செய்து தரப்படவில்லை என்றே பலர் கூறும் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், ஆதார் முகாம்களில் கவுன்சிலருக்கு வேண்டியவர்களை முதலில் அனுப்பி வைக்கப்படுவதாகவும், வயதானவர்கள், பெண்களை நீண்ட நேரம் நிற்க வைப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பல நாட்கள் நடையாய் நடந்தும் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களும் பலர் உள்ளனர்.  இதுபோன்ற பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை போக்க, 2013ம் ஆண்டு போன்று பொதுமக்கள் வசிக்கும் பகுதியிலேயே ஆதார் அட்டை பெறுவதற்கான முகாம்களை நடத்த வேண்டும். தமிழக அரசும் பொதுமக்கள் எளிய முறையில் ஆதார் எண் பெறுவதற்காக, இந்த திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கூடுதல் முகாம் அமைக்க சம்பந்தப்பட்ட மத்திய அரசு துறை அதிகாரிகளிடம் பேச என்று கோரிக்கை வலுத்துள்ளது.

எந்த துறையில் ஆதார்?
தமிழகத்தில் தற்போது காஸ் இணைப்பு பெற ஆதார் எண் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரேஷன் கார்டுகளுக்கு பதில் மின்னணு கார்டு வழங்கப்பட உள்ளது. ஆதார் எண் அடிப்படையிலேயே இந்த பணிகள் நடைபெற உள்ளது.இந்நிலையில், ஆதார் கார்டு எண்களை எந்தெந்த துறைகளில் பயன்படுத்தலாம் என்பது குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் ஞானதேசிகன் தலைமையில் நடைபெறுகிறது.

அமெரிக்காவில் சமூக பாதுகாப்பு எண்
அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்கும், அரசு சார்பில் ஒரு அடையாள எண் வழங்கப்படுகிறது. அந்த எண் இருந்தால் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ், வங்கியில் பணம் எடுப்பது, பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்தும் பெற முடியும். அமெரிக்காவில் எஸ்.எஸ்.என். (சமுக பாதுகாப்பு எண்) என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது.

வீடு வீடாக விண்ணப்பம் விநியோகம்
வாக் காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான விண்ணப்பம் ஏப்ரல் மாதம் முதல் வீடு வீடாக விநியோகிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி கூறினார்.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நேற்று நிரு பர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கான ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் துவங்கப்பட்டுள் ளது. வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப் பது மற்றும் வாக் காளர் பட்டியலில் உள்ள பெயர்கள், விலாசம் உள்ளிட்டவைகளில் திருத்தம் இருந் தால் சரி செய்வதற்கான அனைத்து பணிகளையும் ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாநில அளவில் ஒருங்கிணைப்பு குழு எனது தலைமையில் அமைக்கப்படும். இதில் கலெக்டர், மாவட்ட தேர்தல் அலுவலர்கள் இருப்பார்கள். இவர்களுடன் வருகிற 13ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தப்படும். இதையடுத்து 19ம் தேதி மாநில அளவில் பயிற்சி அளிக்கப்படும். வருகிற 24 மற்றும் 25ம் தேதி மாவட்ட அளவிலும், மார்ச் 30, 31, மற்றும் ஏப்ரல் 1ம் தேதி வாக்குச்சாவடி அளவிலும் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிகள் முடிந்ததும், ஏப்ரல் மாதம் முதல், வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் சேர்ப்பதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வழங்கும் பணி துவங்கும். விண்ணப்பம் கிடைக்காதவர்கள் ஏப்ரல் 12 மற்றும் 16, மே 10 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 64 ஆயிரம் வாக்குப்பதிவு மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பம் பெற்று, ஆதார் எண் மற்றும் திருத்தங்களை அளிக்கலாம்.

ஆதார் எண் இல்லாதவர்கள், ஆதார் எண் பெறுவதற்கான விண்ணப்பம் செய்வதற்கான மனுவில் உள்ள, ‘பதிவு அடையாள எண்ணை‘ எழுதி வழங்கலாம். ஆதார் எண் பெறாதவர்கள் விரைவில் ஆதார் எண் பெறுவதற்காக கூடுதல் சிறப்பு முகாம்களை அமைக்க வேண்டும் என்று மக்கள் துறை கணக்கெடுப்பு பதிவாளரிடம் தேர்தல் கமிஷன் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. எந்த பகுதிகளில் அதிகளவில் ஆதார் எண் பெறாதவர்கள் இருப்பதாக தெரியவந்தால் அங்கு சிறப்பு முகாம் நடத்தப்படும். வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணிகள் ஜூலை மாதம் முடிவடையும். இதையடுத்து ஆதார் எண் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக் காளர்களை சரி செய்வதற்கான தனி சாப்ட்வேர் மூலம் சரி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு சந்தீப் சக்சேனா கூறினார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...