விடைத்தாள்கள் எரிந்தன ...

தர்மபுரி அரசு பள்ளியில் பாதுகாக்கப்பட்டு வந்த எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு விடைத்தாள் எரிந்தது குறித்து, மாணவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இப்பள்ளியில் உள்ள ப்ளஸ்2 கட்டுகாப்பு மையம், 3 கேமராக்கள் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 உள்ளிட்ட
பொதுத்தேர்வுகளுக்கான, வினாத்தாள் கட்டுகாப்பு மையம் மற்றும் இத்தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம் பணி உள்ளிட்டவை ஆண்டு தோறும் நடந்து வருகிறது.இப்பள்ளி வளாகத்தில் கடந்த, 2012ம் ஆண்டு திருத்தப்பட்ட, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு விடைத்தாள்கள் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, 4 மணிக்கு, இப்பள்ளியில் விடைத்தாள் பாதுகாக்கப்பட்டு வந்த அறையில் திடீர் என, புகை எழுந்துள்ளது.இதனால், அதிர்ச்சி அடைந்த, வினாத்தாள் கட்டுகாப்பு மைய பாதுகாவலர்கள், இதுகுறித்து, பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தீயணைப்புத்துறையினர், தீயை அணைத்தனர். ஆனாலும், இதில், பெரும்பாலான விடைத்தாள்கள் தீயில் கருகியது. இச்சம்பவம் கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் கலெக்டர் விவேகானந்தன், எஸ்.பி., லோகநாதன் ஆகியோருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2 பொது தேர்வு வினாத்தாள் கட்டுகாப்பு மையமான, அதியமான் அரசு ஆண்கள் பள்ளியில் உள்ள கட்டுகாப்பு மையத்துக்கு கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கலெக்டர் விவேகானந்தன், எஸ்.பி., லோகநாதன், சி.இ.ஓ., மகேஸ்வரிக்கு ஆலோசனை வழங்கினார்.எஸ்.பி., லோகநாதன் உத்தரவின் படி, போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். சி.இ.ஓ., மகேஸ்வரியும், இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும், வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் உள்ள அனைத்து ஜன்னல்களும் செங்கல் மூலம் அடைக்கப்பட்டு வருகிறது.இம்மையத்தை தொடர்ந்து கண்காணிக்க, மூன்று கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதற்கான ஒயரிங் பணி நடந்து வருகிறது. இன்று(நேற்று) இரவுக்குள் அல்லது இன்று காலைக்குள் கண்காணிப்பு கேமரா செயல்பாட்டுக்கு வரும். மேலும், இங்கு கூடுதல் போலீஸார், தீயணைப்புத்துறையினர் , கல்வித்துறையினர் என, மொத்தம், 6 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...