பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பிற்பட்ட,மிக பிற்பட்ட மாணவர்களில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர் களுக்கு, பரிசுத்தொகை, சான்று வழங்கியதில் குளறுபடி ஏற் பட்டதால் பெற்றோர் அதிருப்தி அடைந்தனர்.
2013-14ம் கல்வி ஆண்டு அரசு பொது தேர்வில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பிற்பட்ட, மிக பிற்பட்ட மாணவர்களில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பிற்பட்டோர் நலத்துறை சார்பில் சான்று, பரிசு தொகையை நேற்று கலெக்டர் முனுசாமி வழங்கினார். முதல் பரிசு ரூ.3,000,இரண்டாம் பரிசு ரூ.2,000,மூன்றாம் பரிசு ரூ.1,000 வழங்கப்பட்டது. இத்துறை சார்பில் பிற்பட்ட அலுவலர், கலெக்டர் கையெழுத்துடன் கூடிய பாராட்டு சான்று வழங்கப்பட்டது. நேற்று வழங்கிய சான்றில், தற்போதுள்ள கலெக்டர் முனுசாமி கையெழுத்தின்றி, ஏற்கனவே இங்கு பணிபுரிந்த கலெக்டர் ராஜாராமன், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சங்கரநாராயணன் ஆகியோர் கையெழுத்திட்ட பழைய சான்றுகளையே வழங்கினர்.இதை பெற்ற மாணவர்,பெற்றோர் குழப்பம் அடைந்தனர்.
காத்திருப்பு: மேலும் சான்று, பரிசுத்தொகை பெறுவதற்காக காலை 9:30 மணிக்கு வருமாறு மாணவர்,பெற்றோர்களை பிற்பட்ட நலத்துறையினர் அழைத்திருந்தனர். நேற்று பகல் 1 மணி வரை பரிசு, சான்று வழங்கப்படவில்லை.நீண்ட நேரம் காத்திருந்த பெற்றோர், மாணவர்கள் கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். நலத்திட்டங்களை எப்போதும் பகல் 12:30 மணிக்கு தான் வழங்குவேன். அப்போது வந்தால் போதும் என மாவட்ட அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் பாலலட்சுமி கூறுகையில், ""பரிசுத்தொகை நிதி கால தாமதமாக தான் வந்தது. பழைய கலெக்டர் இருக்கும் போதே, பாராட்டு சான்றினை தயாரித்து வைத்து விட்டோம். ஆகையால் தான் பழைய கலெக்டர் கையெழுத்துடன் சான்றினை வழங்கினோம்,'' என்றார்.