''மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர்,'' என, மலேசிய நாட்டின் கல்வித்துறை இணை அமைச்சர் கமலநாதன் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் இருந்து, நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை வந்த கமலநாதன், விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தமிழ் தொன்மையான மொழி; அந்த மொழிக்கு மலேசிய அரசு உரிய மரியாதை வழங்கி வருகிறது. வரும் கல்வியாண்டு முதல், 254 அரசு பள்ளிகளில் திருக்குறளை பாடத்திட்டமாக அமைக்க உள்ளோம். ஆரம்பப் பள்ளிகள் மட்டுமின்றி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் இரண்டு
பல்கலைக்கழகங்களில் திருக்குறளை பாடத்திட்டமாகச் சேர்க்க உள்ளோம். இந்தியா - மலேசியா நாடுகள் கலாசார அடிப்படையில் ஒன்றிணைந்து உள்ளன. அங்கு இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் பேர் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் படித்து வருகின்றனர். உதவித்தொகை பெற்று மலேசியாவில் கல்வி கற்க வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை, வரும் கல்வியாண்டு முதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மலேசியாவில் கல்வி பயிலும் இந்தியர்கள், முழு சுதந்திரத்துடனும், பாதுகாப்புடனும் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!
நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...
-
More than 100 Keyboard Shortcuts: Keyboard Shorcuts (Microsoft Windows) 1. CTRL+C (Copy) 2. CTRL+X (Cut) ...... 3. CTRL+V (Paste) 4. ...
-
இன்று SSTA சார்பில் தொடுத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையானஊதியம் வழங்க வேண்டும் என்ற வழக்கு எண் ;MD-4420/2014 (9300-4200) இ...