மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு

பொள்ளாச்சி அருகே, மாணவர்களை பணி செய்ய வற்புறுத்திய தலைமையாசிரியருக்கு கல்வித்துறை அதிகாரிகள் கட்டாய விடுப்பு அளித்தனர்.



பொள்ளாச்சி அருகே தெற்கு ஒன்றியம் பொன்னேகவுண்டனுார் பகுதி மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 21 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இரண்டு ஆசிரியர் பள்ளியான இங்கு தலைமையாசிரியராக உள்ள ஜெயலட்சுமி மீது புகார் கூறி, பெற்றோர் மற்றும் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பள்ளியை முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கல்வித்துறை அதிகாரிகள் சமசரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



'தலைமையாசிரியர் ஜெயலட்சுமி மாணவர்களை தரக்குறைவாக பேசுவதுடன், அடித்தும் உள்ளார். மேலும், மாணவர்களை அவ்வப்போது பள்ளிப்பணிகளை செய்ய வற்புறுத்தியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. எனவே, இவரை மாற்றம் செய்ய வேண்டும்,' என பெற்றோர் தெரிவித்தனர். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.



இது குறித்து உதவித்தொடக்க கல்வி அலுவலர் பூம்பாவை கூறுகையில், ''மாணவர்களை தலைமையாசிரியர் பணி செய்ய வற்புறுத்தியது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர் உத்தரவின் பேரில், தலைமையாசிரியருக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இப்புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவருக்கு மாற்றாக குறிஞ்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் மாற்றம் செய்யப்பட்டு பள்ளி தொடர்ந்து செயல்படுகிறது,' என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...