தேர்வு ஒருபுறம், மதிப்பீடு மறுபுறம்... இதுவா! அதுவா! கல்வித்துறை அதிகாரிகள் கலக்கம்

தேர்வுகள் நடக்கும்போதே, விடைத்தாள் திருத்தும் பணிகளை துவக்க உத்தரவிட்டுள்ளதால், கல்வி அதிகாரிகள், நிர்வாக அலுவலர்கள், ஆசிரியர்கள் பணிச் சுமையில் திணறி வருகின்றனர்.

மாநிலம் முழுவதும், பிளஸ் 2 தேர்வுகள் துவங்கியுள்ளன. 10ம் வகுப்பு
மாணவர்களுக்கு, 19ம் தேதி தேர்வுகள் துவங்கவுள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிக்கான தேதிகள் அறிவித்துள்ளது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.கோவை மாவட்டத்தில், விடைத்தாள் திருத்தும் பணிகள், 16ம் தேதி துவங்கவுள்ள நிலையில், பிற மாவட்டங்களிலிருந்து, மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டுக்கள் இறக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், கோவையில் பள்ளிகள், மாணவர்கள் மற்றும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை, அதிக அளவில் உள்ளது.

தேர்வுப் பணிகளை கண்காணித்தல், மாணவர்களுக்கு வினாத்தாள், விடைத்தாள் கவனமாக கொண்டு வருதல் மற்றும் செல்லுதல், பிற மாவட்டங்களுக்கு விடைத்தாள்களை அனுப்புதல், விடைத்தாள்களை பிரித்து கட்டுதல், ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் உள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகளும் துவங்குவதால், பணிகள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இச்சூழலில், மாவட்ட அதிகாரிகள், அலுவலர்களின் நிலை, பணிச்சுமை உணராமல், தேர்வு முடிவுகளை விரைவாக அறிவிக்கவேண்டும் என்ற ஆவலில், விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான உத்தரவையும் பிறப்பித்துள்ளது, கல்வித்துறையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணி என்பது எளிதானதல்ல. ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்தல், 'டம்மி நம்பர்' வழங்குதல், விடைத்தாள் திருத்தும் முகாம் மையங்கள் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் உள்ளன. இப்பணிகள் அனைத்தும் அருகிலிருந்து அதிகாரிகள் கண்காணிப்பது அவசியம். தேர்வு நடக்கும் சமயத்தில், தேர்வுப் பணிகளை கண்காணிப்பதா அல்லது விடைத்தாள் திருத்தும் பணிகளை கண்காணிப்பதா என்ற சிக்கல் எழுந்துள்ளது.

சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'அதிகப்படியான, பணிச் சுமைகளை திணித்துவிட்டு, முறைகேடுகள் நடந்தால், அதிகாரிகள், ஆசிரியர்கள், அலுவலர்களை வாட்டுவது ஏற்புடையதல்ல. 'பயிற்சி பெற்ற, பறக்கும்படை உறுப்பினர்கள், அறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிக்கு, இவர்களை விடுவித்து, புதிய ஆசிரியர்களை நியமித்தால், அதிக சிக்கல் ஏற்படும். விடைத்தாள் திருத்தும் பணியை தேர்வுக்கு பின்பே துவங்கவேண்டும்' என்றார்.

குளறுபடிக்கு வாய்ப்பு
ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைநிலை ஆசிரியர்கள் முதல் முதன்மை கல்வி அதிகாரி வரை அனைவரும் தேர்வு பணியில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு அதிகப்படியான பணிச்சுமைகள் உள்ளன. இந்நிலையில், விடைத்தாள் திருத்தும் பணிகளை துவக்கினால், கல்வி அதிகாரிகள் முழுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபடமுடியாமல், பொறுப்பு அதிகாரிகளை நியமிக்கவேண்டிய சூழல் உருவாகும். போதிய அனுபவம் இல்லாத பொறுப்பு அதிகாரிகளால், விடைத்தாள் திருத்தும் பணிகளில், குளறுபடிகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...