பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் உள்ள தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா???

நேற்று நடைபெற்ற பத்தாம் பொதுத்தேர்வு கணித  வினாத்தாளில் 
  1. ஒரு மதிப்பெண் வினாவில் 15வது கேள்வியில் தமிழில் "ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு" என்று உள்ளது.   ஆங்கிலத்தில் "Probability of getting 3 heads and 3 tails in tossing a coin 3 times is:"என்று உள்ளது.
  2. 5 மதிப்பெண் வினா பகுதியில் வினா எண்  38ல் தமிழில் "(0,5), (-2,-2), (5,0), (7,7) என்ற புள்ளிகளை உச்சிகளாக கொண்டநாற்கரமானது ஒரு சாய்சதுரம் என நிரூபி" என்று உள்ளது. ஆங்கிலத்தில் "Prove that (0,5), (-2,-2), (5,0) and (7,7) are the vertices of a rhombus." என்று உள்ளது.
மேற்காணும் தவறுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்படுமா என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...