பேச்சுவார்த்தையில் சமரசம் இல்லாததால் இழுபறி! போராட்டத்தை முடிக்க அதிகாரிகள் தீவிரம்

பல ஆண்டுகளாக, ஈரோடு சி.என்.கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றவேண்டும் என்றும், அக்கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என, அடிக்கடி மாணவர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து போராட்டம், ஆர்ப்பாட்டம்,
ஆஉண்ணாவிரதம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றன.இந்நிலையில், கடந்த வாரம் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது தாசில்தார் அன்னபூரணி, ஆர்.டி.ஓ., மேனகா, மற்றும் போலீஸார் சேர்ந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும், அரசு தரப்பில் முன்னேற்றம் இல்லாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.நேற்று முன்தினம், சி.என்.கல்லூரி மாணவர்கள் சங்க கிளை செயலாளர் ஜெயசூர்யா தலைமையில், திடீரென்று, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நேற்று, கோவை மண்டல இணை இயக்குனர் (கல்லூரி கல்வி) ஜெகதீசன், கல்லூரி முதல்வர் உதயகுமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், மாணவ சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது.



இப்பேச்சுவார்த்தையில், நல்ல முடிவுகள் எட்டப்படாத நிலையில், மாணவர்கள் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.அந்த உள்ளிருப்பு போராட்டத்தில் சி.என்.கல்லூரியை, அரசு கல்லூரியாக மாற்ற வேண்டும். கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். முதுகலை கல்வி மாணவர்களுக்கு, விடுதி அமைத்து தர வேண்டும். அரசின் இலவச லேப்டாப் மற்றும் அடிப்படை சலுகைகள் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதற்கு, அதிகாரிகள் தரப்பில், அனைத்து கோரிக்கைகளையும், அரசு விரைவில் நிறைவேற்றித்தரும் என தெரிவித்தனர்.இருப்பினும், இழுபறி நிலை தொடர்வதால், உள்ளிருப்பு போராட்டமும் தொடர்கிறது.முன்னதாக, இப்பிரச்னை தொடர்பாக, மாணவர்கள் சார்பில், கலெக்டர் பிரபாகரிடம் தனியாக மனு வழங்கப்பட்டது.பேச்சுவார்த்தையில் தீர்வு கிட்டாததால், மேலும், சில நாட்களுக்கு இப்போராட்டம் தொடரும் என்ற நிலை நீடிக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...