தலைநகரத்தில் தள்ளாடும் கல்வித்தரம் ....

மாநில அளவில் நடத்தப்பட்ட தேர்வில் மாநிலத்தின் தலைநகரில் சிறந்த அடைவுத்திறனை எட்ட முடியாததன் காரணம் என்ன? மற்ற மாவட்டத்திற்கும் சென்னை மாவட்டத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன? 1. சென்னை மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதாவது சென்னையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சென்னையை சேர்ந்தவர்களே. சென்னையிலேயே இருப்பிடம்,வீடு, வாகனம் மற்றும்
அவர்களின் குழந்தைகளுக்கு உயர்தர பள்ளிகளில் உயர்தர கல்வி....... 2. இதில் பெரும்பாலான ஆசிரியர்கள் பெண் ஆசிரியர்கள் மற்றும் நன்றாக பொருள் ஈட்டக்கூடிய கணவன் மார்களின் மனைவிகள். 2 பேர் சம்பளம் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை ஆனால் மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் சொந்தங்களை விட்டுவிட்டு இரயில் ஏறி, பஸ் ஏறி பயணம் செய்து பள்ளிக்கு வந்து வேலை செய்துவிட்டு மீண்டும் குடும்பத்தை கவனிக்க மீண்டும் பயணம் இதில் அதிக அளவில் பெண்களே பாதிப்பு............இங்கும் 2 சம்பளமாக இருப்பினும் தன் குழந்தைகளை கவனிக்க கூட நேரமின்மை, மன உளச்சல் மற்றும் பல.... இந்த அடைவுத்திறன் தேர்வு முடிவுகளை பார்க்கும்போது சென்னை வாசிகள் கல்வித்தரத்தில் அதிக அக்கறை காட்ட வில்லையோ என்று தோன்றுகிறது. மேலும் சென்னையை எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை போலும். கல்வித் துறையே தலைநகரில் இருக்கும்போது மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான நிலை வருவதற்கு சாத்தியமே இல்லை.....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...