மத்திய அரசின் அறிவுறுத்தலையும் மீறி அழைப்புகளுக்கான கட்டணங்களை பெருமளவுக்கு உயர்த்த தொலைபேசி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. அண்மையில் நடந்த அலைகற்றை ஏலத்தின் தாக்கம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தும் என மத்திய அரசு
மதிப்பிட்டுள்ளது. நிமிடத்திற்கு 1.3 காசு வீதம் இந்த இழப்பு இருக்கும் என அரசு கணித்துள்ளது. இதனையடுத்து அந்த அளவிற்கு கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது.
அதற்கு மேல் கட்டண உயர்வு கூடாது என தொலை தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அண்மையில் நிறுவனங்களை எச்சரித்து இருந்தார். ஆனால் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சத்தமில்லாமல் கட்டணங்களை பெருமளவு அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு சில நிறுவனங்கள் அழைப்புகளுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தி இணையதள சேவைக்கான கட்டணத்தை ஓரளவிற்கு குறைக்க திட்டமிட்டுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
மற்றும் சில நிறுவனங்கள் இரண்டு கட்டணங்களையுமே நிமிடத்திற்கு 8.8 காசில் இருந்து 13 காசாக ஆதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நுகர்வோர் வரும் மாதங்களில் தொலைபேசி சேவைக்கு அதிகம் செலவழிக்க வேண்டி வரும் என தகவல்கள் தெரிவிக்கின்ற