பீகாரில் வினாத்தாள் மாறியதால் குளறுபடி: ஹிந்தி தேர்வு ரத்து

பீகாரில் பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்று நடைபெறவிருந்த ஹிந்தி முதல் தாளுக்கான தேர்வு பள்ளிக் கல்வித்துறை திடீரென ரத்து செய்துள்ளது.


பூர்னியா மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுக்கான வினாத்தாள் மாற்றி வழங்கியதால் அங்கு மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தேர்வெழுதும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சூர்ய நாராயண சிங் யாதவ் கல்லூரிக்கு அனுப்ப வேண்டிய உருது வினாத்தாளுக்கு பதிலாக ஹிந்தி முதல் தாளுக்கான வினாத்தாளை மாற்றி அனுப்பியதால் இந்த குழப்பம் ஏற்பட்டது. அந்த வினாத்தாளையும் கொண்டு கல்லூரி மாணவர்கள் சிலர் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால் திங்கள் கிழமை நடைபெறவிருந்த ஹிந்தி முதல் தாள் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது.

இந்த பொறுப்பற்ற செயலால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தொடர்பான அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...