வரும் நிதியாண்டுக்கான (2015-16) பட்ஜெட்டுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை
பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கியது.
சுமார் 40 நிமிஷங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் உள்ள பல்வேறு அம்சங்களுக்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அதோடு, பட்ஜெட் கூட்டத் தொடர் தொடர்பாகவும் இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
வழக்கமாக, மார்ச் 3-வது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். முதலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து துறை ரீதியாக மானிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அதற்கு பேரவையில் ஒப்புதல் வழங்கப்படும். இந்தத் தொடர் ஏப்ரல் மாதம் இறுதி வரையும், சில ஆண்டுகளில் மே மாதம் முதல் வாரம் வரையும் நீடிக்கும்.
இந்த ஆண்டும் பெரும்பாலும் மார்ச் 3-வது வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம் எனத் தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 17-ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 5 நாள்களுக்கு நடைபெற்ற இந்தக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை, அந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத் தொடரில் பேரவைத் தலைவரைத் தாக்க முயன்றதாகக் கூறி தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பேரவையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டனர்.