மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் சிறப்பு என்ன?

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் உள்ள சிறப்புகள் என்னென்ன என்பதை விளக்குவது தொடர்பாக, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (ஐ.சி.ஏ.ஐ.,) திருப்பூர் கிளை சார்பில் சிறப்பு கருத்தரங்கு, ராயபுரத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஐ., பவனில் நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க, வணிகர்கள், ஆடிட்டர்கள், வரி ஆலோசகர்களுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதை மேலோட்டமாக பார்த்தால், சில ஷரத்துக்கள் தவிர பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை என தோன்றும்: உற்று நோக்கும்போது, பெரிய மாற்றங்களை உணரலாம்.அசையா சொத்துக்கள் வாங்கும்போது, விற்கும்போது பணம் கொடுக்கல் - வாங்கல் செய்துகொள்ளலாம் என்கிற நிலை மாறி, வீடு, நிலம், மனை, கட்டடங்கள் போன்ற அசையா சொத்துக்களை விற்பனை செய்வோர், அதற்கான தொகையை ரொக்கமாக பெற்றால், வருமான வரி சட்டம் ஷரத்து 269 எஸ்.எஸ்., படி, அத்தொகை 100 சதவீதம் வருமானமாக கருதப்படும்; அதற்கான வரி செலுத்த வேண்டும். முன்பணம் வாங்கி, திரும்பிச் செலுத்தினாலும், அத்தொகை வருமானமாக கருதப்பட்டு, வரி விதிக்கப்படும். எனவே, விற்பனை தொகை மற்றும் முன்பணம் கொடுக்கும்போது, அத்தொகையை காசோலை, பண வரவோலை மூலமாக கொடுப்பது அல்லது பெற வேண்டியதாக மாற்றப்பட்டுள்ளது.

வருமான வரிப்பிடித்தம் முக்கிய சட்ட திருத்தமாக, 10 லாரிகளுக்கு கீழ் வைத்துள்ள உரிமையாளர்களுக்கு மட்டும், பான் கார்டு எண் பெற்றுக்கொண்டு, வரி விலக்கு பெறும் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.வரும் 2016 முதல், மறைமுக வரி விதிப்பின் கீழுள்ள, வணிக வரி, சேவை வரி மற்றும் மத்திய கலால் வரிகளுக்கு மாற்றாக, ஒருமுனை வரி விதிப்பு என்கிற புதிய வரி விதிப்புமுறை அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வரிவிதிப்பு முறை, அனைவருக்கும் புதியது. இம்முறை அமல்படுத்தப்படும்போது, பல்வேறு கேள்விகள் எழுகின்றன.மதிப்பு கூட்டப்பட்ட வரி, சென்வாட் வரியை என்ன செய்வது; உள்ளூர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விற்பனை எவ்வாறு கணக்கில் கொண்டு வரப்படும்; "சி' பாரம், "எச்' பாரம் போன்ற வணிக வரி படிவங்கள் இருக்குமா; இருக்காதா; ஜே.ஜே., பாரம், பாரம் 10, 8, 1, பாரம் ஐ, மற்றும் பாரம் டபிள்யூ., டபிள்யூ.,வுக்கு பதிலாக என்ன படிவங்களை பயன்படுத்த வேண்டும்.

புதிய சட்டத்தில் உள்ள சாதக, பாதகங்கள் என்ன; புதிய வரி விதிப்பு முறை, ஒருமுனை வரி விதிப்பா? பலமுனை வரி விதிப்பா; புதிய வரி விதிப்பு மாற்றத்துக்கு ஏற்ப, கணக்கு புத்தக பராமரிப்பில் என்ன மாற்றங்கள் செய்யப்படும் என பட்ஜெட்குறித்த பல்வேறு கேள்விகள் எழுகின்றன.இதற்கு விடையளிக்கும் விதமாக, இந்திய பட்டய கணக்காளர் சங்கம் (ஐ.சி.ஏ.ஐ.,) திருப்பூர் கிளை சார்பில், ராயபுரத்தில் உள்ள ஐ.சி.ஏ.ஐ., பவனில் நாளை மாலை 4:30 மணிக்கு சிறப்பு கருத்தரங்கு நடைபெற உள்ளது. வணிகர்கள், வரி ஆலோசகர்கள் மற்றும் ஆடிட்டர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...