மதுரை நகரில் ரோடுகளில் திரியும் ஆதரவற்றோர், பிச்சைக்காரர்களை தங்க வைக்க மாநகராட்சி சார்பில் நான்கு இடங்களில் தங்கும் விடுதிகள் செயல்பட உள்ளன.
மதுரை மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பல
திட்டங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. முன்னோடி திட்டமாக ஆதரவற்றோருக்கு தங்கும் விடுதி 2010ல் செல்லுாரில் செயல்படுத்தப்பட்டது. அனைத்து வார்டுகளிலும் தெருவோரங்கள், பஸ் ஸ்டாப்புகள், பாலங்களின் கீழ் வசிக்கும் ஆதரவற்றோர் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. இதில் 845 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். செல்லுார் தங்கும் விடுதியில் 55 பேர் உள்ளனர். மீதமுள்ளோருக்கு உத்தங்குடி, திருப்பாலை, திருப்பரங்குன்றம், புதுாரில் தங்கும் விடுதிகள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'நகரை துாய்மையாக்கும் முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான்கு மையங்களும் இரண்டு மாதங்களுக்குள் செயல்பட துவங்கும். நகரில் எந்த பகுதியில் ஆதரவற்றோர் இருந்தாலும் இந்த தங்கும் விடுதிகளில் சேர்க்கப்படுவர். மனநலம் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு சந்தைப்பேட்டை, அருள்தாஸ்புரம் தொண்டு நிறுவனங்களின் பராமரிப்பில் உள்ள மையங்களில் சேர்க்கப்படுவர்,' என்றனர்.