நேரடி மானியத் திட்டத்தில் சேராதவர்களுக்கு சமையல் எரிவாயு உருளை முன்பதிவை விநியோகஸ்தர்கள் ரத்து செய்யக் கூடாது என்று எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமையல் எரிவாயு ரத்து குறித்து செல்லிடப்பேசி மூலம் குறுந்தகவலை (எஸ்எம்எஸ்) பெறும் நுகர்வோர், தொடர்புடைய எண்ணெய் நிறுவன நுகர்வோர் குறைதீர் செல்லிடப்பேசியில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.
மார்ச் 31 வரை கெடு: சமையல் எரிவாயு இணைப்பு வைத்துள்ள நுகர்வோர், நேரடி மானியத் திட்டத்தில் சேருவதற்கு வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ஆம் தேதிக்கு மானியம் அல்லாத எரிவாயு உருளை மட்டுமே விநியோகிக்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள சில விநியோகஸ்தர்கள் நேரடி மானியத் திட்டத்தில் இணையாத நுகர்வோருக்கு எரிவாயு உருளை முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாக செல்லிடப்பேசியில் குறுந்தகவலை (எஸ்எம்எஸ்) அனுப்பியுள்ளனர். இதனால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதிகாரிகள் விளக்கம்: ""மானியத்துடன் கூடிய எரிவாயு உருளைகள் (ரூ.405.50), மானியம் இல்லாத எரிவாயு உருளைகள் (ரூ.605.50) என இரண்டு வகையான எரிவாயு உருளைகளையும் ஐஓசி (இண்டேன்), பிபிசிஎல் (பாரத்), ஹெச்பிசிஎல் ஆகியவை விநியோகஸ்தர்களுக்கு விநியோகித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்கள்-விநியோகஸ்தர்களின் கணினி இணைப்பு அடிப்படையில் முன்பதிவு செய்யப்பட்டு தொகைக்கான ரசீது தயாரிக்கப்பட்டு நுகர்வோருக்கு எரிவாயு உருளை வழங்கப்படுகிறது.
எனினும் நேரடி மானியத் திட்டத்தில் சேரும் கெடு (மார்ச் 31) நெருங்கி வருவதால், மானியத்துடன் கூடிய எரிவாயு உருளையை (ரூ.405) அதிக அளவில் வைத்துக் கொண்டு நுகர்வோருக்கு விநியோகிக்க சில விநியோகஸ்தர்கள் தயங்குவதாகத் தெரிகிறது. அதாவது, ரூ.405.50-க்கான எரிவாயு உருளையை அதே கட்டண அடிப்படையில் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு விநியோகிக்க முடியாது என்பதால், முன்பதிவை ரத்து செய்கின்றனர். இவ்வாறு நுகர்வோரின் சமையல் எரிவாயு உருளை முன்பதிவை கெடு தேதிக்கு முன்பே ரத்து செய்வது தவறானது. இவ்வாறு முன்பதிவு ரத்து காரணமாக பாதிக்கப்படும் நுகர்வோர்
தொடர்புடைய எண்ணெய் நிறுவன குறைதீர்ப்பு மைய செல்லிடப்பேசியில் (செல்லிடப்பேசி எண்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன.) புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
விநியோகஸ்தர் தகவல்: இந்தப் பிரச்னை தொடர்பாக சென்னை அம்பத்தூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவன விநியோகஸ்தர் ஒருவர் கூறியதாவது: ""எங்களது நிறுவனத்தில் மொத்தம் 23,000 சமையல் எரிவாயு உருளை நுகர்வோர் உள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் (சுமார் 85 சதவீதம் பேர்) நேரடி மானியத் திட்டத்தில் இணைந்துள்ளனர். நாள்தோறும் இந்தத் திட்டத்தில் நுகர்வோர் இணைந்து வருகின்றனர். நேரடி மானியத் திட்டத்தில் இதுவரை இணையாதவர்கள் முன்பதிவு செய்யும் நிலையில், அவர்களுக்கு மானியத்துடன் கூடிய (ரூ.405) எரிவாயு உருளை விநியோகிக்கப்படுகிறது. வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகே அனைவருக்கும் மானியம் அல்லாத எரிவாயு உருளை விநியோகம் தொடங்கும். இந்த நிலையில் நேரடி மானியத் திட்டத்தில் இணையாத நுகர்வோரின் முன்பதிவை ரத்து செய்வது தவறானது'' என்றார் அவர்.
புகார் தெரிவிக்க...
சென்னை, மார்ச் 4: சமையல் எரிவாயு முன்பதிவு ரத்து, மானியத் திட்டத்தின் வங்கிக் கணக்கில் தொகை கிடைக்காதது உள்ளிட்டவற்றுக்கு எண்ணெய் நிறுவனங்களின் கீழ்க்கண்ட செல்லிடப்பேசி எண்களில் புகார் தெரிவித்து விளக்கம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியன் ஆயில் (இண்டேன்) இணைப்பு உள்ளோர்...: 1800233555
பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) இணைப்பு உள்ளோர்...: 1800224344
ஹெச்பிசிஎல் நிறுவன இணைப்பு உள்ளோர்....: 044-24985153