தர்மபுரியில் அறிமுகம்: தேர்வு மையங்களில் முதலுதவி நடமாடும் மருத்துவ குழுக்கள்

வரும் 5ம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்குகிறது. தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் 2  பேர், திடீரென மயக்கம் அடைந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்,
சென்னை தேர்வு துறையின் அனுமதி கேட்டு, அரை  மணி நேரம் கூடுதலாக தேர்வு எழுத நேரம் வழங்கப்பட்டது. இம்முறை இதுபோன்ற சம்பவங்கள் நடக் காமல் இருக்க, முன்னெச்சரிக்கையாக  நடமாடும்  மருத்துவ குழு இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி கூறியதாவது: முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 தேர்வு மையத்திற்கு ஒரு நடமாடும்  மருத்துவ குழு இயங்க கலெக்டர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாவட்டத்தில் மொத்தம் 6 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில்  ஒரு டாக்டர், ஒரு செவிலியர், உதவியாளர் உள்பட 4 பேர் இருப்பார்கள். மருத்துவ உதவி எங்கு தேவை என தெரிகிறதோ, அந்த பகுதிக்கு மருத்துவ குழு  விரைந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குளுக்கோசுடன் முதலுதவி மருந்துகள் தயாராக வைத்திருக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் நடந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க எஸ்பி அலுவலக வாட்ஸ் அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...