மத்திய அரசு உத்தரவு 100 நாள் வேலை திட்டத்தில் கூலி 183ஆக உயர்வு

நாடு முழுவதும் ஏழை, எளிய, வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு வருவாய் அளிக்கும் வகையில் 2008 முதல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  ஏரி, குளம், கண்மாய், நீர்வரத்து கால்வாய்
போன்றவைகளில் தூர்வாரும் பணிகளை தொழிலாளர்கள் செய்தனர். பின்னர், விவசாய பண்ணை குட்டைகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, இந்திரா நினைவு குடியிருப்பு வீடுகள், பசுமை வீடுகள், ஊராட்சி சேவை மையம், அங்கன்வாடி மையம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில், இத்திட்ட தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு முதலில் திட்ட அளவீடு முறையில் பணிகள் செய்யும் அளவிற்கு ரூ.60, ரூ. 80, ரூ.119, ரூ.142 என படிப்படியாக கூலி உயர்த்தப்பட்டது. கடந்த மார்ச் வரை ரூ.167 கூலியாக வழங்கப்பட்டது.

இம்மாதம் (ஏப்ரல்) முதல் தொழிலாளர்களுக்கான கூலியை நாள் ஒன்றுக்கு ரூ. 183ஆக உயர்த்தி வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, இந்த கூலி உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது என ஊரக வளர்ச்சிதுறை அதிகாரிகள் கூறினர். மேலும், அவர்கள் செய்யும் பணியின் அளவை பொருத்து கூலி வழங்கப்படும் என்றனர். அதே நேரத்தில் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த திட்டம் முடங்கி போய் உள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...