10-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை (ஏப். 20) முதல் தொடங்கப்பட உள்ளது.

பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மாநிலம் முழுவதும் உள்ள 3,298 மையங்களில் 11
லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

இவர்களின் விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 75 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன.

விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் மே மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...