திட்டமிட்ட படி 15 ம் தேதி காலவரையறையற்ற போராட்டம் , சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு !

தமிழக அரசின் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், திட்டமிட்டபடி ஏப்ரல்15 (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் வரும் 15-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். இதனையடுத்து, இன்று சென்னையில் சத்துணவு ஊழியர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

அமைச்சர்கள் வளர்மதி, வீரமணி, பழனியப்பன் தலைமையில் நடந்த இப்பேச்சுவார்த்தையில் சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட 10 சங்கங்கள் பங்கேற்றன.பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய தலைவர் சண்முகராஜன் தெரிவித்தார். ''இந்த பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்துள்ளது'' என சண்முகராஜன் கூறினார்.ஆனால், இந்த உடன்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.

தமிழக அரசின் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால், திட்டமிட்டவாறு, ஏப்ரல் 15 (புதன்கிழமை) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...